Published : 20 Nov 2013 12:00 AM
Last Updated : 20 Nov 2013 12:00 AM
ஒரு நிறுவனம் நீண்ட கால முதலீட்டிற்காக பணத்தைத் திரட்டுவதற்காகப் பயன்படுத்தும் முறைகளில் ஒன்று பங்கு விற்பனை. பங்கு என்பது ஒரு நிறுவனத்தின் முதலீட்டில் ஒரு பகுதியாகும். இதை ஆங்கிலத்தில் share, stock, equity என்று கூறுவர்.
ஒரு வியாபாரத்திற்கு வேண்டிய முதலீட்டை ஒருவரே போட்டு ஆரம்பித்தால் அது sole proprietorship நிறுவனம், அல்லது ஒருசிலர் சேர்ந்து முதல் போட்டு ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தால் அது Partnership நிறுவனம்.
ஒரு sole proprietorship/Partnership நிறுவனத்தை firm என்ற பொதுப் பெயராலும் அழைப்பர். இந்த firm-ல் முதலீடு செய்தவரும் நிறுவனத்தை மேலாண்மை செய்து நடத்துபவரும் ஒருவரே அல்லது ஒரு சிலரே. இதில் நிறுவனத்திற்கும், முதலீட்டாளருக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது.
ஒரு நிறுவனம் பலரிடமிருந்து பங்குகளைத் திரட்டி முதலீடு செய்து வியாபாரம் செய்யும் போது அதனை joint stock நிறுவனம், public limited நிறுவனம் என்பர்.
இதில் முதலீடு செய்தவர்கள் வேறாகவும், நிறுவனத்தை நடத்துபவர்கள் வேறாகவும் இருப்பார்கள். நிறுவனத்தை ஒரு Board of Directors மூலமாக நடத்தி, நிறுவனத்தின் வளர்ச்சி பற்றி வருடாந்திர பங்குதாரர்கள் கூட்டத்தில் விளக்குவார்கள்.
நிறுவனத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு Board of Directors மட்டுமே காரணமாவார்கள், பங்குதாரர்கள் பொறுப்பாகமாட்டர்கள். மேலும் நிறுவனத்தில் ஏற்படும் லாபமும், நஷ்டமும் பங்குதாரர்களின் பங்கு அளவைப் பொறுத்து பிரித்துக்கொடுக்கப்படும். இந்நிறுவனங்களில் பலர் கூட்டாக பங்கு வைத்துள்ளதால் joint stock நிறுவனம் என்றும், பங்குதாரர்களின் பொறுப்பு ஒரு வரையறைக்குள் இருப்பதால் public limited (liability) நிறுவனம் என்றும் அழைக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT