Published : 22 Mar 2014 12:00 AM
Last Updated : 22 Mar 2014 12:00 AM

டெஸ்கோ,டிரென்ட் ஒப்பந்தம்

பிரிட்டனைச் சேர்ந்த சில்லறை வர்த்தக நிறுவனமான டெஸ்கோ, டாடா குழுமத்தின் அங்கமான டிரென்ட் லிமிடெடுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் டிரென்ட் ஹைபர்மார்க்கெட் லிமிடெட் நிறுவனத்தில் 50 சதவீத பங்குகளை டெஸ்கோ நிறுவனம் வாங்கியுள்ளது.

பிரிட்டன் நிறுவனத்துடன் இணைந்து சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடப் போவதாக டாடா அறிவித்திருந்தது. இதற்கு முறையான ஒப்புதலை அந்நிய நேரடி முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அளித்தது. இதன்படி டிரென்ட் ஹைபர் மார்க்கெட் லிமிடெட் நிறுவனத்தில் இரு நிறுவனங்களும் தலா 50 சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும்.

டிரென்ட் ஹைபர் மார்க்கெட் நிறுவனம் இந்தியாவில் ஸ்டார் பஜார் என்ற பெயரில் மார்கெட்டுகளை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தில் டெஸ்கோ நிறுவனம் 8.5 கோடி பவுன்ட்களை முதலீடு செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தவுடன் மேலும் 12 வணிக மையங்களை டிரென்ட் நிறுவனம் தொடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x