Published : 14 Dec 2013 12:00 AM
Last Updated : 14 Dec 2013 12:00 AM

ஆஷிஸ் ஹேம்ரஜனி - இவரைத் தெரியுமா?

$ இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டிக்கெட் விற்பனை நிறுவனமான பிக் டிரீ எண்டர்டெயின்மெண்ட் (bookmyshow.com) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ இவர்.

$ மும்பை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்த இவர்

$ 1997-ம் ஆண்டு ஜே.வால்டர் தாம்ஸன் என்ற விளம்பர நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

$ 1999-ம் ஆண்டே பிக் டீரி நிறுவனத்தை ஆரம்பித்திருந்தாலும், 2001-ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட டாட்காம் பிரச்னையில் பிஸினஸை தொடர முடியவில்லை.

$ பிறகு மீண்டும் 2007-ம் ஆண்டு bookmyshow.com வை ஆரம்பித்தார். இப்போது சினிமா, பார்முலா-1, கிரிக்கெட் உள்ளிட்ட பல டிக்கெட்களை இவரது நிறுவனம் மூலம் விற்றுவருகிறார்.

$ ஆக்செல் மற்றும் நெட்வொர்க் 18 ஆகிய நிறுவனங்கள் இவரது நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கின்றன.

$ இந்தியா முழுக்க 125 நகரங்களில் 1,900 திரை அரங்குகள், 90 சதவிகித ஆன்லைன் சந்தை மதிப்பை வைத்திருக்கிறது இவரது நிறுவனம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x