Published : 17 Dec 2013 12:00 AM
Last Updated : 17 Dec 2013 12:00 AM
#எல் அண்ட் டி குழும நிறுவனங்களின் தலைவர்.
#1965-ம் ஆண்டு எல் அண்ட் டி நிறுவனத்தின் ஜூனியர் என்ஜீனியராக வேலைக்குச் சேர்ந்த இவர் படிப்படியாக உயர்ந்து 1999-ம் ஆண்டு நிறுவனத்தின் சி.இ.ஓவாக உயர்ந்தார்.
#2003-ம் ஆண்டு நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
#குஜாராத் மாநிலத்தில் உள்ள பிர்லா விஸ்வகர்மா மஹாவித்யாலயா பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்தவர்.
#சுயசரிதை எழுத வேண்டும் என்று இவரிடம் பலரும் கேட்டிருக்கிறார்கள். அந்த புத்தகத்துக்கு Village to World என்று பெயர் வைத்திருக்கிறார். இன்னும் எழுதத் தொடங்கவில்லை.
#மிகக் கடுமையான உழைப்பாளியான இவர், வேலைக்கு சேர்ந்து 22 வருடங்களுக்கு பிறகு விடுமுறை எடுத்திருப்பதாக பிஸினஸ் பத்திரிகை கூறுகிறது.
#தனக்கு பிறகு நிறுவனத்துக்கு தலைமைப் பொறுப்புக்கு வரும் தகுதி யாருக்கும் இல்லை என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு பேட்டி கொடுத்திருக்கிறார்.
#ஹார்வேர்ட் பிஸினஸ் ரிவ்யூ, என்.டி.டி.வி., சி.என்.பி.சி., எர்னஸ்ட் அண்ட் யங், எகனாமிக் டைம்ஸ், இன்சீட் (INSEAD) உள்ளிட்ட பல அமைப்புகள் இவருக்கு விருது வழங்கியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT