Published : 22 Nov 2013 12:20 PM
Last Updated : 22 Nov 2013 12:20 PM
#ஐ.பி.எம். இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தவர். இப்போது அந்த நிறுவனத்துக்கு ஆலோசகராக இருக்கிறார்.
#சென்னையில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் என்ஜீனியரிங்கும், டெல்லி அனைத்திந்திய நிர்வாகவியல் சங்கத்தில் நிர்வாகமும் படித்தவர்.
#படித்த பிறகு பிலிப்ஸ் மெடிக்கல் சிஸ்டத்தில் வேலைக்கு சேர்ந்தார். மும்பையில் இவருக்கு கீழே வேலை செய்தவர்களுக்கு இரண்டு பஞ்சாபிகளுக்கு ஆங்கிலம் தெரியாது. இவருக்கு ஹிந்தி தெரியாது. அதனால் அவர்களுடன் உரையாட ஹிந்தியும் பஞ்சாபியும் கற்றுக்கொண்டார்.
#அதன்பிறகு பெங்களூருவில் இருக்கும் விப்ரோ ஜி.இ. மெடிக்கல் சிஸ்டத்தில் வேலைக்கு சேர்ந்தார். இடையில் கார்ப்பரேட் வாழ்க்கைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு யேமன் அரசாங்கத்தின் ஆலோசகராக மூன்று வருடங்கள் இருந்தார்.
#2009-ம் ஆண்டு பிஸினஸ்வீக் இதழின் 50 முக்கிய சி.இ.ஒகளின் பட்டியலில் இருந்தார். 2011-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் முக்கிய சி.இ.ஓ.களின் பட்டியலிலும் இடம் பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT