Published : 20 Feb 2014 12:25 PM
Last Updated : 20 Feb 2014 12:25 PM
பெரிதும் எதிர்பார்க்கப்படும், தொலைத்தொடர்பு நிறுவனங்களை இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் 10 நாள்களுக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியத் தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) பிராட் பேண்ட் கருத்தரங்கில் பங்கேற்ற தொலைத் தொடர்புத் துறை செயலர் எம்.எப். பரூக்கி கூறுகையில்:
“தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் ஒரு வாரம் அல்லது 10 நாள்களில் வெளியிடப்படும்” என்றார்.
வழிகாட்டு நெறிமுறைகளை அங்கீகரித்துள்ள அதிகாரமளிக் கப்பட்ட அமைச்சர்கள் குழு, லாக்-இன் காலத்துக்கான தொலைத்தொடர்பு உரிமையைப் பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் மீறல், ஈக்விட்டி விற்பனை ஆகியவை தொடர்பான சட்டப்பூர்வ ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. புதிய நெறிமுறைகளின்படி, இணைக்கப்பட்ட நிறுவனத்தின் சந்தை பங்கானது 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அலைக்கற்றைகளை ஏலத்தின் மூலம் பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இணைப்புக்குப் பின் ரேடியோ அலைகளைப் பெற அரசுக்கு கூடுதல் பணம் செலுத்தத் தேவையில்லை. தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களை இணைக்கும் நிறுவனங்கள் மட்டும், ஒதுக்கப் பட்ட அலைக்கற்றைகளுக்கும் சந்தை மதிப்புக்கும் இடையிலான விலை வித்தியாசத்தை அரசுக்கு செலுத்த வேண்டும்.
“அலைக்கற்றைகளைப் பெறுவதற்கு ஏலம் ஒரு வழி. இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் வேறு வகையில் அலைக்கற்றையை அடைவதற்கான வழியாகும்” என பரூக்கி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT