Published : 12 Aug 2014 11:02 AM
Last Updated : 12 Aug 2014 11:02 AM

ராபர்டோ அஸெவெடோ - இவரைத் தெரியுமா?

$ சர்வதேச வர்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) இயக்குநர் ஜெனரலாக 2013-ம் ஆண்டு செப்டம்பர் முதல் பொறுப்பு வகிப்பவர்.

$ பிரேசில் நாட்டுப் பிரஜையான இவருக்கு தாய்மொழி தவிர ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ் ஆகிய மொழிகள் சரளமாகத் தெரியும். டபிள்யூ.டி.ஓ. அமைப்பில் பிரேசிலுக்கான நிரந்தர பிரதிநிதியாக உள்ளார்.

$ சர்வதேச அறிவுசார் காப்புரிமை அமைப்பு (டபிள்யூஐபிஓ), ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தக மேம்பாட்டு அமைப்பு (யுஎன்சிடிஏடி), சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பு (ஐடியு) ஆகியவற்றிலும் இடம்பெற்றுள்ளார்.

$ 1984-ம் ஆண்டு பிரேசிலின் வெளியுறவுத் துறையில் சேர்ந்த இவருக்கு பொருளாதாரம், சர்வதேச வர்த்தகம் சார்ந்த விஷயங்களில் அனுபவம் அதிகம். 1988-ம் ஆண்டு வாஷிங்டனில் உள்ள பிரேசில் தூதரகத்தில் பணியாற்றியுள்ளார்.

$ 2006-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை வெளியுறவு அமைச்சகத்தில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப துறைக்கான துணை அமைச்சராக பணியாற்றினார்.

$ தோஹா பேச்சுவார்த்தையில் பிரேசில் சார்பில் தலைமை அதிகாரியாக பங்கேற்றவர்.

$ 2001-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டுவரை தீர்வாயத்தின் தலைவராக இருந்தார். பொருளாதார விவகாரங்களுக்கான துறையில் இயக்குநராக 2005-06-ம் ஆண்டு இருந்தார்.

$ பிரெஸிலியா பல்கலைக் கழகத்தில் மின்துறையில் பொறியியல் பட்டமும், சர்வதேச விவகாரம் தொடர்பான பட்டமும் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x