Published : 19 Nov 2025 12:02 AM
Last Updated : 19 Nov 2025 12:02 AM

இந்தியா - அமெரிக்கா இடையே இறுதி கட்டத்தில் வர்த்தக பேச்சு

புதுடெல்லி: இந்​தி​யா-அமெரிக்கா இடை யிலான வர்த்தக ஒப்​பந்​தத்​தின் முதல்​கட்ட பேச்​சு​வார்த்தை முடிவடை​யும் தரு​வா​யில் இருப்​ப​தாக மத்​திய அரசின் உயர​தி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து அவர்​கள் கூறி​யுள்​ள​தாவது: இந்​தி​ய-அமெரிக்க பரஸ்பர வர்த்தக ஒப்​பந்​தத்​தின் முதல் கட்ட பேச்​சு​வார்த்தை இறு​திக் கட்​டத்தை நெருங்​கி​யுள்​ளது. இதன் மூலம், அமெரிக்​கா​வின் சந்தை அணுகல் சிக்​கல்​களுக்கு தீர்வு காண்​ப​தோடு, இந்​திய பொருட்​களுக்கு ட்ரம்ப் நிர்​வாகம் விதித்த 50 சதவீத வரி தொடர்​பான பிரச்​சினை​களுக்​கும் தீர்வு காணப்​படும்.

இந்​திய பொருட்​களுக்கு 25 சதவீத பரஸ்பர வரி விதிப்​பு, ரஷ்​யா​விலிருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால் கூடு​தலாக 25 சதவீத வரி விதிப்பு என மொத்​தம் 50 சதவீத வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்​வாகம் அமல்​படுத்​தி​யுள்​ளது.

இந்த நிலை​யில், அமெரிக்கா​வுட​னான பரஸ்பர வர்த்தக பேச்​சு​வார்த்தை இது​வரை 6 சுற்​றுகள் நடந்து முடிந்​துள்​ளன. இரு கட்​டங்​களாக பிரித்து மேற்​கொள்​ளப்​பட்டு வரும் இந்த வர்த்தக பேச்​சு​வார்த்​தை​யில் ஒரு கட்​டம் முடிய இன்​னும் சில காலங்​கள் பிடிக்​கும். மற்​றொரு கட்ட பேச்​சு​வார்த்​தை​யில்​தான் பரஸ்​பரம் 25 சதவீத வரி​வி​திப்​புக்கு தீர்வு காணப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இல்​லை​யெனில் அந்த ஒப்​பந்​தம் அர்த்​தமற்​ற​தாகி விடும்.
இவ்​வாறு அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x