Last Updated : 18 Nov, 2025 07:40 AM

 

Published : 18 Nov 2025 07:40 AM
Last Updated : 18 Nov 2025 07:40 AM

தங்கம் விலை ரூ.1.75 லட்சமாக உயர வாய்ப்பு: இறக்குமதி மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பைக் குறைக்க கோரிக்கை

கோவை: தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலை​யில், ஓராண்​டுக்​குள் ஒரு பவுன் தங்​கம் விலை ரூ.1.74 லட்​சம் வரை உயர வாய்ப்​புள்​ள​தால், மத்​திய அரசு இறக்​குமதி மற்​றும் ஜிஎஸ்டி வரி​வி​திப்​பைக் குறைக்க வேண்​டும் என்​று தங்க நகை தயாரிப்​பாளர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

தங்​கத்​தின் விலை வரலாறு காணாத வகை​யில் உயர்ந்து வரு​வ​தால், நகை தயாரிப்​புத் தொழில் கடுமை​யாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்​நிலை​யில், வரும் மாதங்​களில் தங்​கம் விலை மேலும் அதி​கரிக்​கும் என வல்​லுநர்​கள் கணித்​துள்​ள​தாக தங்க நகை தயாரிப்​பாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்​பாளர்​கள் சங்​கத் தலை​வர் முத்து வெங்​கட்​ராம் `இந்து தமிழ் திசை' செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: கரோனா தொற்​றுப் பரவலுக்கு பின்​னர் தங்​கத்​தின் விலை உலக அளவில் தொடர்ந்து உயர்ந்து வரு​கிறது. ஒரு பவுன் தங்​கம் விலை கடந்த வியாழக்​கிழமை ரூ.93,840-ஆக இருந்​தது. சனிக்​கிழமை ரூ.91,840-ஆக​வும், திங்​கள்​கிழமை (நேற்​று) ரூ.91,680-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது.

எதிர்​வரும் நாட்​களில் தங்​கம் விலை தொடர்ந்து உயரும் என்​றும், ஒரு டிராய் அவுன்ஸ் (31.10546 கிராம் தங்​கம்) 6,500 அமெரிக்க டாலர் வரை உயரும் என்​றும் அமெரிக்க வல்​லுநர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

ஓராண்டுக்குள் உயர வாய்ப்பு: அதாவது, இந்​திய ரூபாய் மதிப்​பில் ஒரு பவுன் விலை ரூ.1.74 லட்​சம் வரை உயர வாய்ப்பு உள்​ள​தாக கூறப்​பட்​டுள்​ளது. ஓராண்​டுக்​குள் இந்த விலை உயர்வு இருக்​கும் என்​றும் தெரி​வித்​துள்​ளனர்.

மத்​திய அரசு தங்​கத்​தின் மீது தற்​போது விதிக்​கும் இறக்​குமதி வரி 6 சதவீதத்தை 2 சதவீத​மாக​வும், ஜிஎஸ்டி வரி​வி​திப்பை 3 சதவீதத்​தில் இருந்து 1.5 சதவீத​மாக குறைக்க வேண்​டும் என்று கோவை உள்​ளிட்ட நாடு முழு​வதும் உள்ள தங்க நகை தொழில் அமைப்​பு​கள் சார்​பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்​கப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x