Published : 16 Nov 2025 12:10 AM
Last Updated : 16 Nov 2025 12:10 AM

வரலாற்றில் மிக அதிகபட்சமாக நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 595 பைசாவாக உயர்வு

நாமக்கல்: ​நாமக்​கல் மண்டல கோழிப்​பண்ணை வரலாற்​றில் முதல்​முறை​யாக ஒரு முட்டை விலை 595 பைசாவாக நிர்​ண​யம் செய்​யப்​பட்டுள்​ளது.

​நாமக்​கல் மண்​டலத்​தில் 1,000-க்​கும் மேற்​பட்ட கோழிப்​பண்​ணை​களில் 7 கோடி முட்​டைக் கோழிகள் வளர்க்​கப்​படு​கின்​றன. தின​மும் 6 கோடி முட்​டைகள் உற்​பத்தி செய்​யப்​படு​கின்​றன. இவை தமிழக அரசின் சத்​துணவு திட்​டத்​துக்கு விநி​யோகம் செய்​யப்​படு​வதுடன், வெளி மாநிலங்​கள், வெளி நாடு​களுக்​கும் அனுப்​பிவைக்​கப்​படு​கின்​றன.

நாமக்​கல்​ முட்​டைகளுக்கு தேசிய முட்டை ஒருங்​கிணைப்​புக் குழு (என்​இசிசி) விலை நிர்​ண​யம் செய்​கிறது. அதை கோழிப் பண்​ணை​யாளர்​கள் ஏற்​றுக்​கொண்​டுள்​ளனர்.

2024 டிசம்​பர் 9-ம் தேதி ஒரு முட்​டை​யின் பண்​ணைக் கொள்​முதல் விலை 590 பைசா​வாக நிர்​ண​யம் செய்​யப்​பட்​டிருந்​தது. இது​வே, நாமக்​கல் மண்டல முட்டை வரலாற்​றில் அதி​கபட்ச விலை​யாக இருந்​தது. இந்​நிலை​யில், கடந்த ஒரு வார​மாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வந்​தது. கடந்த 14-ம் தேதி முட்டை விலை 590 பைசா​வாக நிர்​ண​யிக்​கப்​பட்​டது. இச்​சூழலில் நேற்று என்​இசிசி மண்​டலத் தலை​வர் சிங்​க​ராஜ் தலை​மை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில் முட்டை விலை மேலும் 5 பைசா உயர்த்​தப்​பட்​டு, பண்​ணைக்​கொள்​முதல் விலை 595 பைசாவாக நிர்​ண​யிக்​கப்​பட்​டது.

நாமக்​கல் மண்​டலத்​தில் கடந்த 50 ஆண்டு கோழிப்​பண்ணை வரலாற்​றில் முதல்​முறை​யாக ஒரு முட்​டை​யின் விலை 595 பைசாவாக நிர்​ண​யிக்​கப்​பட்​டிருப்​பது கோழிப் பண்​ணை​யாளர்​கள் மத்​தி​யில் மகிழ்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தற்​போது குளிர் சீசன் தொடங்​கி​யுள்​ள​தால் முட்டை நுகர்வு அதி​கரித்​துள்​ளது. இதனால் முட்டை விலை ஏற்​றம் கண்டு வரு​வ​தாக பண்​ணை​யாளர்​கள் தெரி​வித்​தனர்.

நாட்​டின் பிற மண்​டலங்​களில் முட்டை விலை நில​வரம் (பைசாவில்): சென்னை 660, பர்​வாலா 621, பெங்​களூரு 645, டெல்லி 660, ஹைத​ரா​பாத் 605, மும்பை 670, மைசூர் 610, விஜய​வாடா 625, ஹொஸ்​பேட் 585, கொல்​கத்தா 685. இதே​போல,பிராய்​லர் கோழி உயிருடன்​ ஒரு கிலோ ரூ. 104 என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. முட்​டைக்​கோழி உயிருடன்​ ஒரு கிலோ ரூ.112 என நிர்​ணயிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x