Published : 14 Nov 2025 09:39 AM
Last Updated : 14 Nov 2025 09:39 AM

இந்​திய பொருளாதாரம் 6.5% வளரும்: மூடிஸ் நிறுவன ஆய்வில் தகவல்

புதுடெல்லி: மூடிஸ் நிறு​வனம் அதன் குளோபல் மேக்​ரோ அவுட்​லுக் 2026-27 அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: ”வலு​வான உள்​கட்​டமைப்​பு, பன்​முகப்​படுத்​தப்​பட்ட ஏற்​றுமதி மற்​றும் வலு​வான உள்​நாட்டு தேவை ஆகியவை இந்​திய வளர்ச்​சி​யின் மீள்​தன்​மைக்கு வலு​வான ஆதா​ர​மாக உள்​ளன.

இதன் காரண​மாக, இந்​தி​யா​வின் வளர்ச்சி 2027 வரை 6.5 சதவீத​மாக நீடிக்​கும். உலகளா​விய நிச்​சமயற்ற தன்​மை​கள் மற்​றும் வர்த்தக தடைகள் அதி​லும் குறிப்​பிட்ட சில ஏற்​றும​தி​கள் மீதான அமெரிக்​கா​வின் வரி விதிப்பு அதி​க​மாக இருந்த போ​தி​லும் இந்​தி​யா​வின் வளர்ச்​சி​யானது ஈர்க்​கக்​கூடிய அளவி​லான மீள்​தன்​மையை காட்​டி​யுள்​ளது.

சில பொருட்​களுக்கு 50 சதவீத அமெரிக்க வரி​களை எதிர்​கொள்​ளும் இந்​திய ஏற்​றும​தி​யாளர்​கள் தங்​களது ஏற்​றும​தி​களை பல்​வேறு நாடு​களின் புதிய சந்​தைகளுக்கு திருப்​பி​விடு​வ​தில் வெற்றி பெற்​றுள்​ளனர். செப்​டம்​பரில் அமெரிக்கா​வுக்​கான ஏற்​றுமதி 11.9 சதவீதம் குறைந்​த​போ​தி​லும் ஒட்​டுமொத்த ஏற்​றுமதி செப்​டம்​பரில் 6.75 சதவீதம் அதி​கரித்​துள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x