Published : 14 Nov 2025 05:52 AM
Last Updated : 14 Nov 2025 05:52 AM

தொழில் தொடங்க 5 நாட்களில் அனுமதி: தமிழக தொழிலதிபர்களுக்கு பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா அழைப்பு

சென்னை: பஞ்​சாபில் தொழில் தொடங்க 5 நாட்​களில் அனு​மதி வழங்​கப்​படும் எனவும், பஞ்​சாபின் புதிய தொழில் கொள்கை 2026-ல் வெளி​யிடப்​படும் என்​றும் தெரி​வித்​துள்ள அம்​மாநில அமைச்​சர் சஞ்​சீவ் அரோ​ரா, தங்​கள் மாநிலத்​தில் முதலீடு செய்ய தமிழக தொழில​திபர்​களுக்கு அழைப்பு விடுத்​துள்​ளார்.

‘பஞ்​சாப் இன்​வெஸ்ட்’ முதலீட்​டாளர்​கள் சந்​திப்பு நிகழ்ச்சி, சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் பஞ்​சாப் மாநில தொழில் மற்​றும் வர்த்​தகத் துறை அமைச்​சர் சஞ்​சீவ் அரோரா பங்​கேற்​று, பஞ்​சாப் மாநிலத்​தின் தொழில் வாய்ப்​பு​கள், அரசின் புதிய கொள்​கைகள் மற்​றும் முதலீட்​டாளர்​களுக்​கான சாதக​மான சூழல் குறித்து விரி​வாகப் பேசி​னார். தொடர்ந்து, தமிழக தொழில​திபர்​களை பஞ்​சாபில் முதலீடு செய்ய வரு​மாறும் அழைப்பு விடுத்​தார்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: பஞ்​சாப் மாநிலம் இந்​தி​யா​வில் முதலீடு செய்ய மிகச் சிறந்த மாநிலங்​களில் ஒன்​றாகும். தகவல் தொழில்​நுட்​பம், செமிகண்​டக்​டர், உற்​பத்​தி, ஜவுளி, உணவு பதப்​படுத்​தும் தொழில் என எந்​தத் துறை சார்ந்த தொழிலும் பஞ்​சாபில் சாத்​தி​யம்.

மேலும், அண்​மை​யில் கொண்​டு​வந்த வர்த்தக உரிமைச் சட்​டத்​தின்கீழ், பஞ்​சாபில் முதலீடு செய்​யும் பசுமை மற்​றும் சில ஆரஞ்சு வகை தொழிற்​சாலைகளுக்கு அனைத்து அனு​ம​தி​களும் 5 நாட்​களில் வழங்​கப்​படு​கிறது. தொழில் பூங்​காக்​களுக்கு வெளியே அமைக்​கப்​படும் ஆலைகளுக்கு 15 நாட்​களி​லும், விரி​வாக்​கத் திட்​டங்​களுக்கு 18 நாட்​களி​லும் அனு​மதி வழங்​கப்​படும்.

பஞ்​சாபில் 2022 முதல் இது​வரை ரூ.1.37 லட்​சம் கோடி முதலீடு​கள் ஈர்க்​கப்​பட்​டு, 5 லட்​சம் பேருக்கு வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. கடந்த 2 மாதங்​களில், வர்​த​மான் ஸ்டீல்ஸ் ரூ.2,500 கோடி, ஹேப்பி ஃபோர்​ஜிங்ஸ் ரூ.1,000 கோடி, ஃபோர்​டிஸ் மருத்​து​வ​மனை ரூ.1,000 கோடி, ஐஓஎல் ரூ.1,400 கோடி முதலீடு செய்​வ​தாக அறி​வித்​துள்​ளன.

சென்​னை​யில் முரு​கப்பா குழு​மம், டிவிஎஸ் மோட்​டார்​ஸ், வோர்ட் யுஎஸ், பவன் சைபர் டெக், ஹட்​சன், கேவின் கேர், குருடே மற்​றும் டாக்​டர் அகர்​வால் மருத்​து​வ​மனை நிர்​வாகத்​தினரைச் சந்​தித்​தோம். இவர்​கள் அனை​வரும் பஞ்​சாபில் நேரடி​யாகவோ அல்​லது மறை​முக​மாகவோ முதலீடு செய்ய ஆர்​வம் காட்​டி​யுள்​ளனர். பஞ்​சாபில் 2035-ம் ஆண்டு வரையி​லான மின்​தேவையை இப்போதே திட்​ட​மிட்டு வரு​கிறோம்.

மேலும், தொழில​திபர்​கள் தலை​மை​யில் அமைக்​கப்​பட்ட குழுக்​களின் பரிந்​துரை அடிப்​படை​யில் ஒரு புதிய தொழில் கொள்​கையை உரு​வாக்கி வரு​கிறோம். இந்த புதிய கொள்கை 2026 ஜனவரி மாதத்​துக்​குள் வெளி​யிடப்​படும். இது இந்​தி​யா​வின் மிகச் சிறந்த தொழில் கொள்​கை​யாக இருக்​கும் என உறு​தி​யளிக்​கிறேன். இவ்​வாறு அவர் கூறி​னார். இந்​நிகழ்​வில், பஞ்​சாப் இன்​வெஸ்ட் தலைமை செயல் அதி​காரி அமித் தாக்​கா, இணை தலைமை செயல் அதி​காரி ஜஸ்ப்​ரீத் உள்​ளிட்​டோர்​ பங்கேற்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x