Last Updated : 13 Nov, 2025 05:59 AM

3  

Published : 13 Nov 2025 05:59 AM
Last Updated : 13 Nov 2025 05:59 AM

தொடரும் விலை உயர்வால் பணி ஆணைகள் இல்லை: 10 ஆயிரம் பொற்கொல்லர்கள் ஊர் திரும்பினர்

கோவை டவுன்ஹால் பகுதியில் செயல்படும் தங்க நகை பட்டறையில் பணியாற்றும் பொற்கொல்லர்கள். (கோப்பு படம்)

கோவை: தங்​கம் விலை வரலாறு காணாத வகை​யில் தொடர்ந்து உயர்ந்து வரு​வ​தால் போது​மான பணி ஆணை​கள் இல்​லை. இதனால் பிற மாவட்​டங்​களை சேர்ந்த 10 ஆயிரம் பொற்​கொல்​லர்​கள் சொந்த ஊர்​களுக்​குச் சென்​று​விட்​ட​தாக கோவை தங்க நகை தயாரிப்​பாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

தொழில் நகரான கோவை தங்க நகை தயாரிப்​பிலும் தேசிய அளவில் புகழ் பெற்​றுள்​ளது. ஒரு லட்​சம் பேர் இத்​தொழிலில் வேலை​வாய்ப்பு பெற்​றுள்​ளனர். தங்​கத்​தின் விலை வரலாறு காணாத வகை​யில் உயர்ந்து வரு​வ​தால் நகைகளுக்​கான பணி ஆணை​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ள​தாக தங்க நகை தயாரிப்​பாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்​பாளர்​கள் சங்​கத் தலை​வர் முத்து வெங்​கட்​ராம் `இந்து தமிழ் திசை' செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: கோவை​யில் 40 ஆயிரம் பொற்​கொல்​லர்​கள் உட்பட சுமார் ஒரு லட்​சம் பேர் தங்க நகை தயாரிப்பு தொழிலில் வேலை​வாய்ப்பு பெற்​றுள்​ளனர். கரோனா தொற்​றுப் பரவலுக்கு முன் தின​மும் சராசரி​யாக 200 கிலோ அளவுக்கு தங்க நகை வணி​கம் கோவை​யில் நடை​பெற்று வந்​தது.

2020-ம் ஆண்​டுக்கு பின் தங்​கம் விலை தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது. மத்​திய அரசு தங்​கம் இறக்​கும​திக்கு விதிக்​கப்​பட்ட வரியை 15 சதவீதத்​தில் இருந்து 6 சதவீத​மாக குறைத்​துள்​ளது. ஜிஎஸ்டி வரி 3 சதவீதம் விதிக்​கப்​படு​கிறது. உலக சந்தை நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரு​கிறது. தொடரும் விலை உயர்​வால் தங்க நகை தயாரிப்​புத் தொழில் முற்​றி​லும் முடங்​கி​யுள்​ளது.

திரு​மணம் உள்​ளிட்ட பல்​வறு சுப நிகழ்​வு​களுக்​காக தங்க நகைகளை வாங்​குபவர்​களால், சில நாட்​களில் மட்​டும் ஓரளவு வியா​பாரம் நடக்​கிறது. மற்ற நாட்​களில் வியா​பாரம் முற்​றி​லும் முடங்​கி​யுள்​ளது. நகைகளுக்கு போது​மான பணி ஆணை​கள் கிடைக்​காத​தால் பொற்​கொல்​லர்​கள் பலர் தங்​களின் சொந்த ஊர்​களுக்​குச் சென்று விட்​டனர். கோவை​யில் மொத்​தம் 40 ஆயிரம் பொற்​கொல்​லர்​கள் உள்​ளனர். தற்​போது நில​வும் நெருக்​கடி​யான சூழல் காரண​மாக 10 ஆயிரம் பேர் தங்​களின் சொந்த ஊர்​களுக்​கு சென்​று​விட்​டனர்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x