Published : 10 Nov 2025 06:45 AM
Last Updated : 10 Nov 2025 06:45 AM

தூத்துக்குடியில் நடப்பாண்டில் 19 லட்சம் டன் உப்பு உற்பத்தி: விலை குறைவால் உப்பளங்களில் தேக்கம்

தூத்துக்குடி பகுதியில் மழையில் இருந்து உப்பை பாதுகாக்கும் வகையில், உப்பு குவியல்களை பிளாஸ்டிக் ஷீட் போட்டு மூடி வைத்துள்ள உப்பள உரிமையாளர்கள். | படம்: என்.ராஜேஷ் |

தூத்துக்குடி: நடப்​பாண்​டில் தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் 19 லட்​சம் டன் அளவுக்கு உப்பு உற்​பத்தி நடந்​துள்​ள​தாக உற்​பத்​தி​யாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர். தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் வேம்​பார், தூத்​துக்​குடி, முத்​தை​யாபுரம், முள்​ளக்​காடு, ஆறு​முகநேரி பகு​தி​களில் 20 ஆயிரம் ஏக்​கரில் உப்​பளங்​கள் அமைந்​துள்​ளன.

இவற்​றில் சுமார் 30 ஆயிரம் தொழிலா​ளர்​கள் பணி​யாற்​றுகின்​றனர். ஆண்​டுக்கு சராசரி​யாக 25 லட்​சம் டன் உப்பு உற்​பத்தி செய்யப்​படு​கிறது. நாட்​டின் உப்பு உற்​பத்​தி​யில் குஜ​ராத் மாநிலத்​துக்கு அடுத்​த​படி​யாக தூத்​துக்​குடி மாவட்​டம் உள்​ளது.

இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்​பத்​திக்​கான பணி​கள் தொடங்​கும். ஏப்​ரல் முதல் செப்​டம்​பர் வரை 6 மாதங்​கள் தான் உப்பு உற்​பத்​திக்​கான உச்​சகட்ட காலங்​கள். அக்​டோபர் மாதம் வடகிழக்கு பரு​வ​மழை தொடங்​கியதும் உப்பு சீசன் முடியும். கடந்த ஆண்டு வடகிழக்கு பரு​வ​மழை ஜனவரி மாதம் கடைசி வாரம் வரை நீடித்​துள்​ளது. இதன் காரண​மாக உப்பு உற்​பத்​திக்​கான பணி​கள் தாமத​மாகவே தொடங்​கின.

இந்த ஆண்டு மே 15-ம் தேதி வரை மழை குறுகிட்​டதால் உப்பு உற்​பத்தி சரி​யாக நடை​பெற​வில்​லை. ஆனால், மே 15-ம் தேதிக்கு பிறகு உப்பு உற்பத்​திக்கு சாதக​மான சூழ்​நிலை ஏற்​பட்​டது. அதன் பிறகு அக்​டோபர் 15 வரை உப்பு உற்​பத்தி அமோக​மாக நடை​பெற்​றது. கடந்த ஆண்டு 50 சதவீதம் மட்​டுமே உப்பு உற்​பத்​தி​யாகி இருந்த நிலை​யில், இந்த ஆண்டு உப்பு உற்​பத்தி 75 சதவீதத்தை கடந்​துள்​ளது. வடகிழக்கு பரு​வ​மழை அக்​டோபர் 16-ல் தொடங்​கியதை தொடர்ந்து நடப்பு உப்பு உற்​பத்தி சீசன் முடிவுக்கு வந்துள்ளது.

இதையடுத்து உற்​பத்தி செய்​யப்​பட்ட உப்பை மழை​யில் இருந்து பாது​காக்​கும் வகை​யில், உப்​பளங்​களில் உள்ள உப்பு குவியல்​களை பிளாஸ்​டிக் ஷீட் போட்டு மூடி வைத்​துள்​ளனர். வடகிழக்கு பரு​வ​மழை முழு​மை​யாக முடிவடைந்த பிறகே அடுத்த சீசனுக்​கான பணி​கள் தொடங்​கும். தூத்​துக்​குடி சிறிய அளவு உப்பு உற்​பத்​தி​யாளர் சங்க முன்​னாள் செய​லா​ளர் ஏ.ஆர்​.ஏ. எஸ்​.தன​பாலன் ‘இந்து தமிழ் திசை’ செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: வடகிழக்​குப் பரு​வ மழைக் காலம் தொடங்​கி யதையடுத்து தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் உப்பு உற்​பத்தி முடிவுக்கு வந்​துள்​ளது.

மாவட்​டத்​தில் இந்த ஆண்டு உப்பு உற்​பத்தி தாமத​மாக தொடங்​கி​னாலும், கடைசி 4 மாதங்​கள் நன்​றாக இருந்​தது. இதனால் இந்த ஆண்டு 75 சதவீதத்​துக்கு மேல், அதாவது 19 லட்​சம் டன் உப்பு உற்​பத்​தி​யாகி​யுள்​ளது.

அதே​நேரத்​தில் இந்த ஆண்டு இது​வரை சுமார் 7 லட்​சம் டன் உப்பு மட்​டுமே விற்​பனை​யாகி​யுள்​ளது. 12 லட்​சம் டன் உப்​பு, உப்​பளங்​களில் இருப்​பில் உள்​ளது. குஜ​ராத் உப்பு குறைந்த விலைக்கு கிடைத்​த​தால், தூத்​துக்​குடி உப்பு அதி​கள​வில் தேங்​கி​யுள்​ளது. அடுத்த ஆண்டு சீசன் தாமத​மாக மார்ச் மாதம் தொடங்​கி​னால், கையிருப்​பில் இருக்​கும் உப்பு காலி​யாக வாய்ப்பு உள்​ளது.

விலையை பொறுத்​தவரை கடந்த ஆண்​டுடன் ஒப்​பிடு​கை​யில் மிக​வும் குறைந்​துள்​ளது. கடந்த ஆண்டு இதே கால​கட்​டத்​தில் ஒரு டன் உப்பு ரூ.3,000 முதல் ரூ.3,500 வரை விற்​பனை​யான நிலை​யில், தற்​போது தரத்தை பொறுத்து ரூ.2,000 முதல் ரூ.2,500 வரையே விலை போகிறது. இந்த விலை அடுத்த மாதம் சற்று உயரு​வதற்கு வாய்ப்பு உள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x