Published : 07 Nov 2025 08:22 AM
Last Updated : 07 Nov 2025 08:22 AM
புதுடெல்லி: இந்தியாவின் சேவை துறை வளர்ச்சி வேகம் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு அக்டோபரில் குறைந்துள்ளதாக மாதாந்திர ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்எஸ்பிசி இந்தியா சர்வீசஸ் பிஎம்ஐ வணிக செயல்பாட்டு குறியீடு செப்டம்பரில் 60.9-ஆக இருந்த நிலையில், அக்டோபரில் 58.9-ஆக குறைந்துள்ளது.
கடந்த மே மாதத்துக்குப் பிறகு சேவை துறை வளர்ச்சி விகிதம் இந்த அளவுக்கு குறைவது இதுவே முதல்முறை. இந்தியாவின் கூட்டு பிஎம்ஐ குறியீடு செப்டம்பரில் 61-ல் இருந்து கடந்த மாதம் 60.4-ஆகக் குறைந்துள்ளது, இதற்கு பெரும்பாலும் சேவைத் துறையில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT