Published : 30 Oct 2025 03:09 AM
Last Updated : 30 Oct 2025 03:09 AM

இந்திய பணியாளர்களில் சேவை துறை பங்கு 30%

புதுடெல்லி: இந்​தி​யா​வின் பணி​யாளர்​களில் சேவைத் துறையைச் சேர்ந்தவர்கள் பங்கு 30% ஆக உள்ளது.

இதுகுறித்து நிதி ஆயோக் அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: கரோனா தொற்​றுக்​குப் பிறகு பொருளா​தார மீட்​சிக்கு சேவை​கள் துறை முக்​கிய ஆதா​ர​மாக விளங்​குகிறது. எனினும் வேலை​வாய்ப்பு வளர்ச்​சி​யில் இன்​ன​மும் சவால்​கள் நீடித்து வரு​கின்​றன. இது உட்​கட்​டமைப்பு மாற்​றம் மெது​வாக நடை​பெற்று வரு​வதை சுட்​டிக்​காட்​டு​வ​தாக உள்​ளது.

கடந்த ஆறு ஆண்​டு​களில் 40 மில்​லியன் வேலைகள் உரு​வாக்​கப்​பட்​டன. 2011-12-ல் 26.9 சதவீதத்​துடன் ஒப்​பிடும்​போது 2023-24-ல் சேவை துறை வேலை​வாய்ப்பு 29.7 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது. இருப்​பினும் இது இன்​னும் உலகளா​விய சராசரி​யான 50 சதவீதத்தை விட பின்​தங்​கி​யுள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x