Published : 26 Oct 2025 07:08 AM
Last Updated : 26 Oct 2025 07:08 AM

பிஹார் பேரவைத் தேர்தலுக்கு பிறகு அச்சு ஊடக விளம்பர கட்டணத்தை 27% உயர்த்த மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு பிறகு அச்சு ஊடகங்​களுக்​கான விளம்பரக் கட்​ட​ணங்​களை 27% உயர்த்த மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

இது தொடர்​பாக மத்​திய தகவல் ஒலிபரப்​புத் துறை உயர் அதி​காரி ஒரு​வர் நேற்று கூறும்​போது, “பாரம்​பரிய ஊடகங்​களில் பல மாற்​றங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இத்​துறை​யில் பணிபுரிவோரின் வாழ்​வா​தா​ரத்​தைப் பாது​காக்​க​வும் வளர்ச்​சியை ஊக்​குவிக்​க​வும் அச்​சு, தொலைக்​காட்சி மற்​றும் திரைப்​படத் துறை​களில் பல சீர்​திருத்​தங்​களை அரசு அறி​முகப்​படுத்தி வரு​கிறது.

பிஹாரில் தேர்​தல் நடத்தை விதி​கள் முடிந்​தவுடன் அச்சு ஊடக விளம்​பரங்​களுக்​கான கட்​ட​ணம் 27% உயர்த்​தப்​படு​வது தொடர்​பான அறி​விப்பு வெளி​யாகும்" என்​றார். 6 ஆண்​டுகளுக்கு பிறகு முதல் முறை​யாக அச்சு ஊடக விளம்பரக் கட்​ட​ணம் உயர்த்​தப்பட உள்​ளது. இதன்​மூலம், பெரும்​பாலும் அரசு விளம்​பரங்​களை நம்பி உள்ள பிராந்​திய அளவி​லான வெளி​யீட்​டாளர்​கள் உட்பட சிறிய மற்​றும் பெரிய செய்​தித்​தாள் நிறு​வனங்​கள் பலன் அடை​யும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு அச்சு ஊடக விளம்​பரக் கட்​ட​ணம் 25% உயர்த்​தப்​பட்​டது. அதற்கு முன்பு 2013-ல் 19% உயர்த்​தப்​பட்​டது. இது​போல தொலைக்​காட்சி விளம்​பரக் கட்​ட​ணங்​களை உயர்த்​து​வது குறித்​தும் அரசு பரிசீலித்து வரு​கிறது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x