Published : 26 Oct 2025 07:00 AM
Last Updated : 26 Oct 2025 07:00 AM

2025-26-ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.6 சதவீதம் வளரும்: சர்வதேச நிதியம் வெளியிட்ட அறிக்கையில் தகவல் 

புதுடெல்லி: இந்​திய பொருளா​தா​ரம் இந்த நிதி​யாண்​டில் 6.6 சதவீத​ம் வளர்ச்சி அடை​யும் என சர்​வ​தேச நிதி​யம் கணித்​துள்​ளது.

உலகின் பல நாடு​களுக்கு அமெரிக்கா வரி​களை உயர்த்​தி​யது. சில நாடு​களு​டன் வர்த்தக ஒப்​பந்​தம் செய்​தது. இதனால் உலகள​வில் நிச்​சயமற்ற தன்மை அதி​கரிக்​கும் சூழலில், உலக பொருளா​தார முன்​னோட்​டம் குறித்த அறிக்​கை​யை, சர்​வ​தேச நிதி​யம் (ஐஎம்​எப்) வெளி​யிட்​டுள்​ளது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: 2025-26-ம் நிதி​யாண்​டில் பொருளா​தா​ரத்​தில் வேக​மாக வளர்ந்து வரும் நாடு​களில் ஒன்​றாக இந்​தியா தொடர்ந்து இருக்​கும். இதன் பொருளா​தா​ரம் 6.6 என்ற வீதத்​தில் வளர்ந்து வரு​கிறது. முதல் காலாண்​டில் பொருளா​தா​ரத்​தில் சிறப்​பான செயல்​பாடு காரண​மாக இந்த வளர்ச்சி ஏற்​பட்​டுள்​ளது. இந்த வளர்ச்சி இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்கா விதித்த வரி​வி​திப்​பின் பாதிப்​பு​களை ஈடு​செய்​துள்​ளது.

சீனா​வின் பொருளா​தார வளர்ச்சி 4.8 சதவீத​மாக இருக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்​தி​யா​வில் இந்த நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் ஏற்​பட்ட வேகம் சற்று குறைவதற்​கான சாத்​தி​யங்​கள் உள்​ள​தால் 2026-ம் ஆண்​டில் இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி 6.2 சதவீத​மாக இருக்​கும். அமெரிக்​கா​வின் வரி பாதிப்​பு​கள் எதிர்​பார்த்​ததை விட குறை​வாக உள்​ளது. இந்த நிதி​யாண்​டில் உலகளவி​லான பொருளா​தார வளர்ச்சி 3.2 சதவீத​மாக இருக்​கும். இது அடுத்த நிதி​யாண்​டில் 3.1 சதவீத​மாக குறை​யும். உலகள​வில் பணவீக்​கம் தொடர்ந்து குறை​யும். வளர்ந்த பொருளா​தார நாடு​களில் வளர்ச்சி வீதம் 1.6 சதவீத​மாக இருக்​கும். வளர்ந்து வரும் பொருளா​தார நாடு​களில் வளர்ச்சி 4.2 சதவீத​மாக இருக்​கும். இது அடுத்த நிதி​யாண்​டில் 0.2 சதவீதம் குறைய​லாம்.

வளர்ந்த பொருளா​தார நாடு​களில் வேக​மாக வளரும் நாடாக ஸ்பெ​யின் இருக்​கும். இதன் வளர்ச்சி வீதம் 2.9 சதவீத​மாக இருக்​கும். அமெரிக்​கா​வின் பொருளா​தார வளர்ச்சி 1.9 சதவீத​மாக இருக்​கும். இது கடந்​தாண்​டில் 2.4 சதவீத​மாக இருந்​தது. பிரேசில் நாட்​டின் வளர்ச்சி வீதம் 2.4 சதவீத​மாக​வும், கனடா​வின் வளர்ச்சி 1.2 சதவீத​மாக​வும், ஜப்​பானின் வளர்ச்சி 1.1 சதவீ​தமாக​வும் இருக்​கும். இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி வேக​மாக இருந்​தா​லும், உலகளா​விய பொருளா​தார வளர்ச்சி அடுத்த நிதி​யாண்​டில் 3.3 சதவீதத்​திலிருந்​து, அடுத்​தாண்டு 2.6 சதவீத​மாக குறை​யும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x