Published : 25 Oct 2025 10:40 AM
Last Updated : 25 Oct 2025 10:40 AM
சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.25) கிராமுக்கு ரூ.100 அதிகரித்துள்ளது. பவுனுக்கு ரூ.800 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.92,000-க்கு விற்பனையாகிறது.
கடந்த அக்.17-ம் தேதி அதிகபட்சமாக ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.12,200-க்கும், ஒரு பவுன் ரூ.97,600-க்கும் விற்பனையானது. அதன் பிறகு சிறிய அளவில் குறையத் தொடங்கியது. நேற்று (அக்.24) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.11,400-க்கும் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.91,200-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், இன்று கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,500-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு பவுன் ரூ.92,000-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் மீதான முதலீடு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதன் விளைவாக அதன் விலை உயர்வதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.170-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,70,000-க்கும் விற்பனையாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT