Published : 23 Oct 2025 05:15 AM
Last Updated : 23 Oct 2025 05:15 AM

மைக்ரோசாப்ட் சிஇஓவுக்கு ரூ.850 கோடி சம்பளம்

மும்பை: பில்​கேட்​ஸ், ஸ்டீவ் பால்​மரை தொடர்ந்து மைக்​ரோ​சாப்ட் நிறு​வனத்​தின் தலை​மைச் செயல் அதி​காரி​யாக (சிஇஓ) சத்யா நாதெள்ளா கடந்த 2014-ம் ஆண்டு பொறுப்​பேற்​றார்.

இவருக்கு கடந்த 2023-24 நிதி​யாண்​டுக்கு ரூ.694 கோடி சம்​பள​மாக வழங்​கப்​பட்​டது. இந்த நிலை​யில், 2024-25-ல் ரூ.850 கோடி சம்​பளம் வழங்​கப்​பட்​டுள்​ளது. இவரது தலை​மை​யில் மைக்​ரோ​சாப்ட்​டில் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பம் முக்​கிய​மான முன்​னேற்​றத்தை கண்​டுள்​ளது. இது உலகள​வில் அந்த நிறு​வனம் முதலிடத்தை தக்​க​வைத்​துக்​கொள்ள பெரிதும் உதவி​யுள்​ளது. சத்​யா​வின் ஊதி​யம் கணிச​மான அளவுக்கு அதி​கரித்​ததற்கு இது​வும் ஒரு முக்​கிய காரண​மாக பார்க்​கப்​படு​கிறது.

சத்​யா​வுக்கு வழங்​கப்​பட்ட மொத்த ஊதி​யத்​தில் 90 சதவீதம் மைக்​ரோ​சாப்ட் பங்​கு​கள் மூல​மாக கிடைத்​துள்​ளது. அவருக்கு கூடு​தலாக அடிப்​படை சம்​பள​மாக 2.5 மில்​லியன் டாலர் அதாவது ரூ.22 கோடி வழங்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x