Published : 23 Oct 2025 01:03 AM
Last Updated : 23 Oct 2025 01:03 AM

இந்திய பொருட்களுக்கான வரி 15 முதல் 16 சதவீதமாக குறையும்: அமெரிக்காவுடன் விரைவில் உடன்பாடு

புதுடெல்லி: இந்​திய பொருட்​களின் மீதான இறக்​குமதி வரியை அமெரிக்கா விரை​வில் 15 முதல் 16 சதவீதமாக குறைக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதற்​கான உடன்​படிக்கை விரை​வில் கையெழுத்​தாகும் என்று தெரி​கிறது.

இதுகுறித்து தகவலறிந்த வட்​டாரங்​கள் கூறிய​தாவது: வரி விதிப்பு குறித்து இந்​தியா மற்​றும் அமெரிக்கா இடையே நீண்ட பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. விரை​வில் இதற்கு சுமுக தீர்வு எட்​டப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. குறிப்​பாக, வேளாண்மை, எரிசக்தி ஆகியவை இருதரப்பு ஆலோசனை​யில் மையப்​புள்​ளி​யாக இருந்​தன. அதன்​தொடர்ச்​சி​யாக, ரஷ்​யா​விலிருந்து கச்சா எண்​ணெய் இறக்​கும​தியை இந்​தியா படிப்​படி​யாக குறைக்​கக்​கூடும்.

மேலும் மரபணு மாற்​றப்​ப​டாத அமெரிக்க சோளம் மற்​றும் சோயா உள்​ளிட்​ட​வற்​றின் இறக்​கும​தியை அதி​கரிக்க இந்​தியா ஒப்​புக்​கொள்​ளும். அவ்​வப்​போது கட்​ட​ணங்​கள் மற்​றும் சந்தை அணுகலை மதிப்​பாய்வு செய்​வதற்​கான ஒரு வழி​முறை​யும் இந்த ஒப்​பந்​தத்​தில் இடம்​பெற்​றுள்​ள​தாக தெரி​கிறது. இவ்​வாறு அந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

எனினும், இந்த விவ​காரம் குறித்து மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சகமோ அல்​லது அமெரிக்​கா​வின் வெள்ளை மாளி​கையோ கருத்து எதை​யும் உடனடி​யாக தெரிவிக்​க​வில்​லை.

இதனிடையே நேற்று முன்​தினம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறுகை​யில், “பிரதமர் நரேந்​திர மோடியை தொடர்பு கொண்டு பேசினேன். வர்த்​தகம் தான் அதில் முக்​கிய விவாத​மாக இருந்​தது. எரிசக்தி விவ​காரத்​தில் ரஷ்​யா​விட​மிருந்து எண்​ணெய் வாங்​கு​வதை இந்​தியா கட்​டுப்​படுத்​தும் என பிரதமர் மோடி உறுதி அளித்​துள்​ளார்” என்​றார்.

இதேபோன்​று, பிரதமரும் ட்ரம்​புடன் பேசி​யதை உறுதி செய்​துள்​ளார். ஆனால், அந்த பேச்​சு​வார்த்​தை​யின் விவரங்​களை அவர்​ வெளி​யிடவில்​லை. இப்போது இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x