Published : 20 Oct 2025 06:57 AM
Last Updated : 20 Oct 2025 06:57 AM
சென்னை: சரக்குகளை கையாளும் நிறுவனங்களை, ஊக்கப்படுத்த தெற்கு ரயில்வே சலுகைகள் அளித்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனின் கோரிக்கைகளுக்கு இணங்க, தெற்கு ரயில்வே தமிழகத்தின், டெல்டா மாவட்டங்களுக்கு நேரடி கொள்முதல் மையங்கள் வாயிலாக கொள்முதல் செய்யப்படும் நெல்லை எடுத்து வர சரக்கு ரயிலை இயக்கியது.
தஞ்சை, நாகப்பட்டினம், நீடாமங்கலம், கும்பகோணம், சீர்காழி, மயிலாடுதுறை, பேரளம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், பட்டுக்கோட்டை, விருத்தாச்சலம், செங்கை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள கூட்ஸ் ஷெட்டுகளில் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் அக்.1-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 85 ரயில்கள் இயக்கப்பட்டு, 2.3 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டில் 21 சரக்கு ரயில்களும், 2023-ல் 16 சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டன. அறுவடை செய்யப்பட்ட நெல்லை ரயில் சேவை மூலம் கொண்டு வருவதில் தெற்கு ரயில்வே சிறந்த சேவை வழங்கி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT