Published : 19 Oct 2025 01:40 AM
Last Updated : 19 Oct 2025 01:40 AM

உலக சந்தையை புரட்டி போடும் 2 என்எம் சிப்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கருத்து

புதுடெல்லி: இந்​தி​யா​வின் 2 என்​எம் சிப் உலக சந்​தையை புரட்​டிப் போடும் என்று மத்​திய தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தெரி​வித்​துள்​ளார்.

டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற தனி​யார் தொலைக்​காட்சி நிகழ்ச்​சி​யில் அவர் கூறிய​தாவது: தரவு​கள் (டேட்​டா) என்​பது தற்​போது கச்சா எண்​ணெய்க்கு இணை​யாக​வும் தரவு மையங்​கள் (டேட்டா சென்​டர்​கள்) என்​பது எண்​ணெய் சுத்​தி​கரிப்பு ஆலைகளாக​வும் கருதப்​படு​கின்​றன. தற்​போது டேட்டா மற்​றும் டேட்டா சென்​டர்​களே ஒரு நாட்​டின் பொருளா​தார வளர்ச்​சியை தீர்​மானிக்​கின்​றன. இந்​தத் துறை​யில் இந்​தியா முன்​வரிசையை எட்ட நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

குறிப்​பாக உள்​நாட்டு செமி கண்​டக்​டர் உற்​பத்​திக்கு முன்​னுரிமை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. ஒரு காலத்​தில் 7 நானோ மீட்​டர், 5 நானோ மீட்​டர் செமி கண்​டக்​டர்​கள் ஆதிக்​கம் செலுத்தி வந்​தன. தற்​போது 2 நானோ மீட்​டர் (என்எம்) செமி கண்​டக்​டர்​கள் உற்​பத்​தி​யில் உலக நாடு​கள் கவனம் செலுத்தி வரு​கின்​றன.

இந்​தி​யா​வில் 2 என்​எம் சிப் வடிவ​மைக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த சிப் உலக சந்​தையை புரட்​டிப் போடும். உலகத்​தின் ஒட்​டு மொத்த சிப் வடிவ​மைப்​பாளர்​களில் 20 சதவீதம் பேர் இந்​தி​யர்​கள். எனவே இந்​தத் துறை​யில் இந்​தியா சாதனை படைக்​கும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

கடந்த 2023-ம் ஆண்​டில் இந்​திய செமி கண்​டக்​டர் துறை​யின் சந்தை மதிப்பு ரூ.3.17 லட்​சம் கோடி​யாக இருந்​தது. கடந்த 2024-ம் ஆண்​டில் ரூ.3.75 லட்​சம் கோடி​யாக​வும் நடப்​பாண்​டில் ரூ.4.17 லட்​சம் கோடி​யாக​வும் அதி​கரித்து உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x