Published : 17 Oct 2025 03:25 AM
Last Updated : 17 Oct 2025 03:25 AM
சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் இருந்து வருகிறது. செப்.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் தங்கம் விலை அக்.7-ல் ரூ.90,400 ஆக உயர்ந்தது.
எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வட்டி விகிதத்தை அமெரிக்க ஃபெடரல் வங்கி குறைத்தது ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இதன் தொடர்ச்சியாக, சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் விலை நேற்று ரூ.95 ஆயிரத்தை தாண்டி, மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.95,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 உயர்ந்து, ரூ.11,900
ஆக இருந்தது. 24 காரட் தங்கம் விலை ரூ.1.03 லட்சமாக இருந்தது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.206 ஆகவும், கட்டி கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து, ரூ.2.06 லட்சமாகவும் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT