Published : 16 Oct 2025 12:33 AM
Last Updated : 16 Oct 2025 12:33 AM
புதுடெல்லி: பிரபல தொழில்நுட்ப நிறுவனமான இன்போ எட்ஜ் தனது பணியாளர்கள் அனைவருக்கும் விஐபி சூட்கேஸ், ஸ்வீட் பாக்ஸ், விளக்கு அடங்கிய பரிசுத் தொகுப்பை தீபாவளி பரிசாக வழங்கியுள்ளது.
இதுகுறித்து பணியாளர்கள் வெளியிட்ட பதிவில், ``அலுவலகத்துக்குள் நுழைந்தபோது ஒவ்வொரு பணியாளரின் மேசையிலும் கம்ப்யூட்டருக்கு பதிலாக அலங்கரித்து வைக்கப்பட்ட சூட்கேஸ், அதனுடன் சேர்த்து ஸ்வீட் பாக்ஸ் மற்றும் தீபமேற்றும் விளக்கு ஆகியவை தீபாவளி பரிசாக அடுக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ஒவ்வொரு பணியாளர்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது” என்று தெரிவித்துள்ளனர்.
இதைப் பார்த்த இன்ஸ்டா பயனர்கள் பலர், எங்களுக்கும் இதுபோல் எப்போது தீபாவளி பரிசு கிடைக்கும் என்று காத்திருப்பதாக பதிவிட்டுள்ளனர். நொய்டாவில் கடந்த 1995 -ம் ஆண்டு சஞ்சீவ் பிக்சந்தானி என்பவரால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் தற்போது இந்தியாவின் முன்னணி ஆன்லைன் நிறுவனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தை புள்ளிவிவரப்படி, இன்போ எட்ஜ் நிறுவனத்தின் மொத்த சந்தை மூல தனம் ரூ.86,447 கோடியாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT