Published : 11 Oct 2025 12:47 AM
Last Updated : 11 Oct 2025 12:47 AM

பிரான்சில் யுபிஐ அறிமுகத்துக்குப் பிறகு இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை 40% அதிகரிப்பு

புதுடெல்லி: இந்​தி​யா​வின் யுபிஐ மூலம் பணம் செலுத்​தும் வசதியை பிரான்​சில் அறி​முகப்​படுத்​தி​யதற்​குப் பிறகு அங்கு இந்​திய சுற்​றுலா பயணி​களின் வருகை 40 சதவீதம் அதி​கரித்​துள்​ள​தாக பிரெஞ்சு நிறு​வன​மான லைரா நெட்​வொர்க்​கின் தலை​வர் கிறிஸ்​டோப் மரியெட் தெரி​வித்​துள்​ளார்.

குளோபல் பின்​டெக் மாநாட்​டில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து கூறி​யுள்​ள​தாவது:ஒரு வருடத்​திற்கு முன்​பாக இந்​தி​யா​வின் யுபிஐ வசதியை பிரான்​சின் ஈபிள் கோபுரத்​தில் அறி​முகப்​படுத்​தினோம். சில வாரங்​களுக்கு முன்​ன​தாக ஈபிள் கோபுரத்​தின் பொது மேலா​ள​ருடன் பேசிக் கொண்​டிருந்​தேன். அப்​போது, இந்​திய சுற்​றுலாப் பயணி​களின் வருகை 40 சதவீதம் வரை அதி​கரித்​துள்​ள​தாக அவர் கூறியது வியப்பை ஏற்​படுத்​தி​யது.

இந்​திய சுற்​றுலாப் பயணி​கள் வெளி​நாடு​களுக்கு செல்​லும்​போது யுபிஐ போன்ற பழக்​க​மான டிஜிட்​டல் கட்டண முறை​களை பயன்​படுத்​துகை​யில் மிக​வும் வசதி​யாக​வும், பாது​காப்​பாக​வும் உணர்​கின்​றனர். விரை​வில் பிரான்​சின் பைசெஸ்​டர் வில்​லேஜ் ஷாப்​பிங் மையத்​தி​லும் யுபிஐ வசதி அறி​முகப்​படுத்​தப்​படும். இவ்​வாறு கிறிஸ்​டோப்​ மரியெட்​ தெரி​வித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x