Published : 10 Oct 2025 08:28 AM
Last Updated : 10 Oct 2025 08:28 AM

இன்டெல் மணி ரூ.300 கோடிக்கு கடன் பத்திரம் வெளியீடு

சென்னை: இன்​டெல் மணி நிறு​வனம் தனது 6-வது பாது​காக்​கப்​பட்ட, திரும்​பப் பெறத்​தக்க, மாற்ற இயலாத கடன் பத்​திரங்​களை அக்​டோபர் 13-ம் தேதி வெளி​யிடு​கிறது. அக்​டோபர் 28 வரை இந்த திட்​டம் இருக்​கும்.

இதுகுறித்து இன்​டெல் மணி​யின் செயல் இயக்​குநர் மற்​றும் தலைமை நிர்​வாக அதி​காரி உமேஷ் மேனன் கூறிய​தாவது: பிணை​யுறுதி பெற்ற மாற்ற முடி​யாத கடன் பத்​திரங்​கள் (என்​சிடி) ஒவ்​வொன்​றும் ரூ.1,000 முகம​திப்பு கொண்​ட​தாக இருக்​கும். இந்த வெளி​யீடு ரூ.150 கோடி வரை அடிப்​படை வெளி​யீட்டு அளவை கொண்​டது. ரூ.150 கோடி அதி​கப்​படி​யான சந்​தா​வைத் தக்​க​வைத்​துக் கொள்​ளும் விருப்​பத்​தை​யும் கொண்​டுள்​ளது. ஆக மொத்​தம், ரூ.300 கோடி வரை இந்த வெளி​யீட்​டின் மூலம் நிதி திரட்​டப்​படும்.

இந்த கடன்​பத்​திரங்​களுக்கு இன்​போமெரிக்ஸ் ரேட்​டிங்ஸ் மூலம் ‘IVR A-/Stable’ என்ற மதிப்​பீடு வழங்​கப்​பட்​டுள்​ளது. முதலீடு 72 மாதங்களில் இரட்​டிப்​பாகும். ஆண்​டுக்கு 12.25% வட்டி வரு​வாய் ஈட்​டும். மேலும், இந்த கடன்​பத்​திரங்​களை மும்பை பங்​குச் சந்​தை​யில் பட்​டியலிட முன்​மொழியப்​பட்​டுள்​ளது. குறைந்​த​பட்ச விண்​ணப்ப அளவு ரூ.10,000 ஆகும். இவ்​வாறு உமேஷ் மேனன்​ தெரி​வித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x