Published : 10 Oct 2025 08:18 AM
Last Updated : 10 Oct 2025 08:18 AM

மெட்டா சூப்பர் இன்டலிஜென்ஸ் திட்டத்துக்கு தலைமை தாங்கும் அலெக்ஸாண்டர் வாங்கின் பின்னணி என்ன?

பிரதமர் மோடியுடன் அலெக்​ஸாண்​டர் வாங்​

புதுடெல்லி: மெட்டா நிறு​வனம் ஏஐ பிரிவுக்கு திறமை​வாய்ந்த அலெக்​ஸாண்​டர் வாங்​-கை தலைமை அதிகாரி​யாக நியமித்துக் கொண்​டது.

அலெக்​ஸாண்​டர் வாங், 2016-ம் ஆண்​டில் தனது 19-வது வயதில் ஸ்டார்​அப் நிறு​வனத்​தில் பணி​யாற்​றத் தொடங்​கி​னார். அப்​போது அவர் தனது நண்​பர் லூசி குவாவுடன் இணைந்து ஸ்கேல் ஏஐ என்ற ஸ்டார்ட்​அப் நிறு​வனத்தை தொடங்​கி​னார். தங்​களது கனவை நனவாக்க கடின​மாக உழைத்​தனர். அதன் பயனால் குறுகிய காலத்​தில் ஸ்கேல் ஏஐ நிறு​வனம் தொழில்​நுட்​பத் துறை​யில் அனை​வரது கவனத்​தை​யும் ஈர்த்​தது.

அலெக்​ஸாண்​டர் வாங்​-கின் திறமை​யைக் கண்டு வியந்த மெட்டா நிறு​வனர் மார்க் ஸுகர்​பெர்க் அவரை உடனடி​யாக தேர்ந்​தெடுத்து மெட்​டா​வின் ஒட்​டுமொத்த ஏஐ செயல்​பாட்​டிற்​கும் தலை​வ​ராக்​கி​னார். அத்​துடன், அனை​வரை​யும் பிரமிப்​பில் ஆழ்த்​தும் வகை​யில் வாங்​கின் ஸ்டார்ட்​அப் நிறு​வனத்​தில் 14.3 பில்​லியன் டாலரை​யும் முதலீடு செய்​தார். இது இந்​திய மதிப்​பில் ரூ.1.24 லட்​சம் கோடி.

வாங் இப்​போது மெட்​டா​வின் நிபுணர்​கள் அடங்​கிய குழு​விற்கு தலைமை தாங்​கு​கிறார். மேலும், மெட்டா சூப்​பர் இன்​டலி ஜென்ஸ் லேப்ஸ் என்ற அமைப்​பின் கீழ் மெட்​டா​வின் ஏனைய ஏஐ, ஆராய்ச்​சிக் குழுக்களும் இவரது மேற்​பார்​வை​யில்​தான் செயல்​படு​கின்​றன.

பணி நியமனம் செய்​யப்​பட்ட குறுகிய காலத்​திலேயே, மெட்டா ஏ.ஐ. குழுவை 4 தனித்​தனி குழுக்​களாக பிரித்து மறுசீரமைப்பு செய்ய தொடங்​கி​விட்​டார் வாங். சீனா​விலிருந்து நியூ மெக்​சிகோவுக்கு குடியேறிய இயற்​பியல் வல்​லுநர்​ தம்பதிக்கு மகனாக கடந்த 1997-ம் ஆண்​டில் பிறந்​தவர் அலெக்​ஸாண்​டர் வாங். எம்​.ஐ.டி. படிப்பை பாதி​யில் கைவிட்ட இவர் ஸ்கேல் நிறு​வனத்தை தொடங்​கி​னார். தனது 20-வது வயதிலேயே வாங் பில்​லியனர் ஆகி​விட்​டார். ஓபன் ஏஐ சாம் ஆல்ட்​மேன் உட்பட சிலிக்​கான் வேலி​யில் உள்ள முக்​கிய பிர​முகர்​கள் மற்​றும் அமெரிக்க எம்​.பி.க்​களு​டன் இவருக்கு வலு​வான தொடர்பு உள்​ளது.

மெட்டா ஏஐ தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றவுடன் வாங் வெளியிட்ட செய்தியில், நிறுவனம் தனது நீண்டகால தொலைநோக்கு பார்வையை நோக்கி செயல்படுவதற்கு கூர்மையான கவனம் தேவை என்பதை வலியுறுத்தி உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x