Published : 04 Oct 2025 06:12 AM
Last Updated : 04 Oct 2025 06:12 AM

கோயம்பேடு சந்தையில் பீன்ஸ், நூக்கல், கோஸ் விலை உயர்வு

சென்னை: சென்னை கோயம்​பேடு சந்​தை​யில் பீன்​ஸ், நூக்​கல், கோஸ் விலை உயர்ந்​துள்​ளது. கோயம்​பேடு சந்​தை​யில் கடந்த 2 மாதங்​களாக காய்​கறி விலை குறைந்​திருந்​தது. இந்​நிலை​யில் கடந்த சில தினங்​களாக சில காய்​கறிகளின் விலை அதி​கரித்​துள்​ளது. குறிப்​பாக கடந்த வாரம் மொத்த விலை​யில்

கிலோ ரூ.25-க்கு விற்​கப்​பட்ட பீன்ஸ் கிலோ ரூ.60 ஆகவும், ரூ.15-க்கு விற்​கப்​பட்ட நூக்​கல் ரூ.30 ஆகவும், ரூ.5-க்கு விற்​கப்​பட்ட முட்​டைக்​கோஸ் ரூ.10 ஆகவும் உயர்ந்​துள்​ளது.

விலை உயர்வு தொடர்​பாக கோயம்​பேடு சந்தை காய்​கறி வியா​பாரி​கள் கூறும்போது, “தற்​போது புரட்​டாசி மாதம் என்​ப​தால் அசைவம் தவிர்த்​து, சைவ உணவு​கள் அதி​கம் உண்​ணப்​படு​வ​தால், காய்​கறிகள் அதி​க​மாக வாங்​கப்​படு​கின்றன. இதனால் விலை உயர்ந்துள்ளது என்று​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x