Published : 29 Sep 2025 06:33 AM
Last Updated : 29 Sep 2025 06:33 AM

சாம்பார் வெங்காயம் விலை சரிவு: கிலோ ரூ.20-க்கு விற்பனை

சென்னை: கோ​யம்​பேடு சந்​தை​யில் சாம்​பார் வெங்​கா​யம் விலை கிலோ ரூ.20 ஆக குறைந்​துள்​ளது. மருத்​துவ குணம் உள்ள சாம்​பார் வெங்​கா​யம் சாகுபடி பரப்பு குறை​வாக இருப்​ப​தால், இதன் விலை வழக்​க​மாகவே உயர்ந்தே இருக்​கும். சராசரி​யாக கிலோ ரூ.50-க்கு விற்​கப்​படும். சில மாதங்​களில் கிலோ ரூ.120 வரை உயரும். ஆனால், தற்​போது அதன் விலை கோயம்​பேடு சந்​தை​யில் மொத்த விலை​யில் கிலோ ரூ.20 ஆக குறைந்​துள்​ளது.

மற்ற காய்​கறிகளான கேரட், முருங்​கைக்​காய், அவரைக்​காய் தலா ரூ.40, பீன்ஸ் ரூ.25, பாகற்​காய், கத்​தரிக்​காய், சாம்​பார் வெங்காயம், உருளைக்​கிழங்கு தலா ரூ.20, தக்​காளி ரூ.18, முள்​ளங்​கி, நூல்​கோல், பெரிய வெங்​கா​யம், புடலங்​காய் தலா ரூ.15, பீட்ரூட், வெண்​டைக்​காய் தலா ரூ.10, முட்​டைக்​கோஸ் ரூ.5 என விற்​கப்​பட்டு வரு​கிறது. கோயம்​பேடு காய்​கறி சந்தை மொத்த வியாபாரி​கள் கூறும்​போது, ``கோயம்​பேடு சந்​தைக்கு வரத்து அதிகரித்துள்ளதால் சாம்பார் வெங்காயம் விலை குறைந்துள்ளது'' என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x