Published : 28 Sep 2025 01:21 AM
Last Updated : 28 Sep 2025 01:21 AM

​​​​​​​தங்கம் விலை மீண்டும் உச்சம்: வியாபாரிகள் சொல்வது என்ன?

சென்னை: சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று மீண்​டும் ரூ.85 ஆயிரத்தை தாண்​டியது. பவுனுக்கு ரூ.720 உயர்ந்​து, ரூ.85,120-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. மேலும், வெள்ளி விலை வரலாறு காணாத வகை​யில் உயர்ந்​தது.

சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப, தங்​கம் விலை உயர்ந்​தும், குறைந்​தும் வரு​கிறது. அதன் அடிப்​படை​யில், செப்​.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்தஒரு பவுன் ஆபரணத் தங்​கம், செப்​.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்​தது. எச்​1பி விசா கட்​ட​ணத்தை அமெரிக்க அரசு உயர்த்​தி​யது, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்​கம் விலைஉயர்​வுக்கு முக்​கியக்​காரண​மாக அமைந்​தன. இதன்​பிறகு, இரண்டு நாட்​கள் தங்​கம் விலை குறைந்​திருந்த நிலை​யில், நேற்று முன்​தினம் தங்​கம் விலை உயர்ந்​தது.

இதன்​படி சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்​று மீண்​டும் ரூ.85 ஆயிரத்தை தாண்​டியது. அதாவது பவுனுக்கு ரூ.720 உயர்ந்​து, ரூ.85,120-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. ஒரு கிராம் தங்​கம் ரூ.90 உயர்ந்​து, ரூ.10,640-க்கு விற்​கப்​பட்​டது. 24 காரட் சுத்த தங்​கம் ரூ.92,856 ஆக இருந்​தது. அதே​நேரத்​தில், வெள்ளி விலை வரலாறு காணாத வகை​யில் உயர்ந்​தது. வெள்ளி கிரா​முக்கு ரூ.6 உயர்ந்து ரூ.159 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.6,000 அதி​கரித்து ரூ.1,59,000 ஆகவும் இருந்​தது. வெள்ளி இறக்​கும​திக்கு தடை, வெள்​ளி​யில் முதலீடு செய்​பவர்​களின் எண்​ணிக்கை அதி​கரிப்​பு, தொழில்​ துறை​யில் வெள்ளி தேவை உயர்வு ஆகியவை வெள்ளி விலை வரலாறு காணாக வகை​யில் உயர்​வுக்கு முக்​கிய காரண​மாக உள்​ள​தாக நகை வி​யா​பாரி​கள்​ தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x