Published : 26 Sep 2025 08:13 AM
Last Updated : 26 Sep 2025 08:13 AM

அமெரிக்காவின் 50% வரி விதிப்பு எதிரொலி: சீனாவுக்கான இறால் ஏற்றுமதி அதிகரிப்பு

புதுடெல்லி: இந்​தி​யா​வில் இருந்து ஏற்​றுமதி செய்​யப்​படும் பொருட்​களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்​துள்​ளது. இதனால், இந்​திய இறால் ஏற்​றும​தி​யாளர்​கள் அந்த நாட்​டுடன் வர்த்​தகம் மேற்​கொள்ள இயலாத நிலை​யில் சீனா கைகொடுத்துள்ளது.

இதுகுறித்து கிங்ஸ் இன்ஃப்ரா வென்ச்​சர்ஸ் லிமிடெட்​டின் தலை​வரும் நிர்​வாக இயக்​குநரு​மான ஷாஜி பேபி ஜான் கூறிய​தாவது: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்​வாகம் விதித்​துள்ள கூடு​தல் வரி அமெரிக்க சந்​தை​யில் இந்​தி​யா​வின் போட்​டித்​தன்​மை​யைக் கடுமை​யாக குறைத்​துள்​ளது.

ட்ரம்​பின் இந்த நடவடிக்கை அமெரிக்க சந்​தை​யில் ஈக்​வ​டார், வியட்​நாம், இந்​தோனேசியா ஏற்​றும​தி​களை விட இந்​திய இறால்​களை அதிக விலை கொண்​டா​தாக மாற்​றி​யுள்​ளது. இதனால் அங்​கிருந்து வரும் ஏற்​றுமதி ஆர்​டர்​கள் குறைந்​துள்​ளன. இந்த பாதிப்பை தவிர்க்க இந்​திய சப்​ளை​யர்​கள் சீனா மற்​றும் பிற ஆசிய சந்​தைகளில் ஏற்​றும​திக்​கான வர்த்தக வாய்ப்​பு​களைப் பெறு​வ​தில் அதிக ஆர்​வம் காட்டி வரு​கின்​றனர்.

சீனா​வில் உள்​நாட்டு தேவை வலு​வாக உள்​ள​தால் இந்​திய இறால்​களுக்கு அங்கு வரவேற்பு அதி​கரித்​துள்​ளது. இது, துர​திர்​ஷ்ட​மான நிலை​யிலும் அதிர்​ஷ்ட​மாக கிடைத்த நன்​மை​யாகவே பார்க்​கப்​படு​கிறது.

முன்​னர் அமெரிக்கா​வுக்கு அடுத்​த​படி​யாக இந்​திய இறால்​களை இறக்​குமதி செய்​யும் இரண்​டாவது பெரிய நாடாக சீனா இருந்​தது. ஆனால், இப்​போது அது முன்​னணி இறக்​கும​தி​யாள​ராக உரு​வெடுக்​கும் வாய்ப்பு பிர​காச​மாகி உள்​ளது. வரி இல்​லாத நாடு​களின் சந்​தைகளுக்கு பதப்​படுத்தி ஏற்​றுமதி செய்​வதற்​காக இந்​தி​யா​விலிருந்து அதிக அளவி​லான இறால்​களை சீனா இறக்​குமதி செய்​வ​தில் அதிக ஆர்​வ​மாக உள்​ளது.

அமெரிக்​காவை சார்ந்​திருப்​பதை குறைக்க ஐரோப்​பா, ஐக்​கிய அரபு எமிரேட்​ஸ், ஜப்​பான், தென்​கொரியா போன்ற பிற நாடுகளின் சந்​தைகளை கைப்​பற்​று​வ​தில் இந்​திய இறால் ஏற்​றும​தி​யாளர்​கள் தீவிர​மாக உள்​ளனர்.

அதே​நேரம் அமெரிக்க ஒப்​பந்​தங்​களை வைத்​துள்ள இந்​திய ஏற்​றும​தி​யாளர்​கள் கட்டண சுமையை பகிர்ந்து கொள்ள அங்​குள்ள இறக்​கும​தி​யாளர்​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றனர். டெல்​லி-என்​சிஆர், பெங்​களூரு, ஹைத​ரா​பாத் போன்ற பல்​வேறு நகங்​களின் உள்​நாட்டு சந்​தைகளி​லும் இறால் விற்​பனை கணிச​மான அளவில் அதி​கரித்​து வரு​கிறது. இவ்​வாறு ஜான்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x