Published : 23 Sep 2025 06:23 AM
Last Updated : 23 Sep 2025 06:23 AM

ஜிஎஸ்டி குறைப்பு அமலுக்கு வந்ததால் பொதுமக்கள், ஊழியர்கள், கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி

கோப்புப் படம்

சென்னை: மத்​திய அரசு சரக்கு மற்​றும் சேவை வரியை (ஜிஎஸ்​டி) குறைத்​துள்​ளது. புதிய குறைக்​கப்​பட்ட வரி நேற்​று​முதல் அமலுக்கு வந்​துள்​ளது. இதற்கு பல்​வேறு தரப்​பினரும் மகிழ்ச்சி தெரி​வித்​துள்​ளனர்.

வீட்டு உபயோகப் பொருட்​களின் விற்​பனையகக் கிளை மேலா​ளர் ஆர்​.கணேஷ்: ஜிஎஸ்டி குறைப்பை அடுத்து டிவி, ஏசி உள்​ளிட்ட வீட்​டுக்​குத் தேவை​யான பொருட்​களின் விலை எவ்​வளவு குறைந்​துள்​ளது என பலர் நேரடி​யாக​வும், போன் மூல​மாக​வும் விசா​ரிக்​கின்​றனர். பலர் முன்​ப​திவு செய்​து​விட்​டுச் சென்​றுள்​ளனர். சிலர் வாங்​க​வும் செய்​துள்​ளனர். விற்​பனை மேலும் அதி​கரிக்க வாய்ப்பு உள்​ளது. இது மகிழ்ச்​சி​ அளிக்​கிறது.

ஐடி ஊழியர் ராம் பரணி: ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்​கத்​தக்​கது. ஆனால் வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்​ளிட்ட முக்​கிய​மான சில பொருட்​களுக்கு வரி குறைக்​கப்​பட​வில்​லை. நான் இந்த தீபாவளிக்கு டிவி, வாஷிங் மெஷின் வாங்க வேண்​டுமெனத் திட்​ட​மிட்​டேன். அதில் டிவிக்கு மட்​டுமே வரி குறைக்​கப்​பட்​டுள்​ளது. மற்ற அத்​தி​யா​வசி​யப் பொருட்​களுக்​கும் வரியைக் குறைப்​பதுடன், தொழில் நிறு​வனங்​கள் குறைந்​தது ஓராண்​டுக்கு விலையை ஏற்​றாத​படி கண்​காணிக்க வேண்​டும்.

கார் விநி​யோகஸ்​தர் செந்​தில்​நாதன்: பண்​டிகையை ஒட்டி ஜிஎஸ்டி குறைக்​கப்​பட்​டது நல்ல முயற்​சி​யாகும். பெரும்​பாலான மக்​களுக்கு கார், பைக் வாங்​கும் ஆர்​வ​முள்​ளது. தற்​போது வரி மாற்​றத்​தால் விலை கணிச​மாக குறைந்​துள்​ள​தால், ஷோரூம்​களுக்கு அதி​க​மான வாடிக்​கை​யாளர்​கள் விசா​ரிக்க வரு​கின்​றனர். இதனால் இந்த ஆண்டு விற்​பனை அதி​கரிக்​கும் என நம்​பு​கிறோம்.

வீட்டு உபயோகப் பொருள் விற்​பனை மேலா​ளர் குலோத்​துங்​கன்: ஜிஎஸ்டி குறைந்​தா​லும் வழக்​க​மான விற்​பனையே இருந்​தது. ரூ.15 ஆயிரம் விலை உள்ள டிவி 10 சதவீத வரி குறைப்​பால் ரூ.1,500 விலை குறை​யும். அதற்​காக அந்த டிவியை மக்​கள் வாங்​கி​விட மாட்​டார்​கள். அவர்​களுக்கு தேவை இருந்​தால்​தான் வாங்​கு​வார்​கள். இருப்​பினும் எங்​கள் ஷோரூமில் பொருட்​களை வாங்​கிய​வர்​கள் முகத்​தில் மகிழ்ச்சி தெரிந்​தது. அதற்கு இந்த வரி குறைப்​பு​தான் காரணம்.

பால் விநி​யோகஸ்​தர் பர்​ஜின்: அம்​பத்​தூர் பகு​தி​யில் பால் மற்​றும் பால் பொருட்​களை வாங்கி வீடு​களுக்கு விநி​யோகம் செய்​வதை பகுதி நேர வேலை​யாகப் பார்த்து வரு​கிறேன். ஒரு சில பொருட்​களுக்கு ஜிஎஸ்டி குறைக்​கப்​பட்​ட​தால் வாடிக்​கை​யாளர் அதி​கள​வில் பொருள் வாங்​கு​வார்​கள் என எதிர்​பார்க்​கிறோம். இதனால் எனக்கு கூடு​தல் வரு​மானம் கிடைக்க வாய்ப்​புள்​ளது.

பொறி​யாளர் விஸ்​வ பிரி​யா: ஜிஎஸ்டி குறைந்​த​தால், அன்​றாட பயன்​பாட்​டுப் பொருட்​கள் வாங்​கும்​போது விலை சற்று குறை​வாக இருந்​தது. பேக்​கரி பொருட்​களுக்கு ஜிஎஸ்டி குறைக்​கப்​பட்​ட​தால் அங்​கே​யும் சற்று விலை குறைந்​திருந்​தது. எனது நண்​பர் ஒரு​வர் கார் வாங்​கும்​போது ரூ.70 ஆயிரம் சேமித்​த​தாகத் தெரி​வித்​தார். இன்​னும் சில நாட்​களில் கார் வாங்​கத் திட்​ட​மிட்​டிருக்​கிறேன்.

கடை உரிமை​யாளர் பிர​பாகரன்: ஜிஎஸ்டி குறைப்பை பல நாட்​களாக வியா​பாரி​கள் எதிர்​பார்த்​தனர். இதனால் வரும் நாட்​களில் விற்​பனை அதி​கரிக்​கும் என நம்​பு​கிறோம். ஏற்​கெனவே விதிக்​கப்​பட்ட ஜிஎஸ்டி மூலம் வாங்கி இருப்பு வைக்​கப்​பட்ட பொருட்​கள் விற்​பனை செய்​வ​தில் நடை​முறை சிக்​கல் இருக்​கிறது. ஆடம்பர பொருட்​களைத் தவிர்த்து மக்​கள் அதி​கம் பயன்​படுத்​தக்​கூடிய அத்​தி​யா​வசி​யப் பொருட்​களுக்கு இன்​னும் வரியைக் குறைத்​திருக்​கலாம்.

ஹார்​டு​வேர்ஸ் உரிமை​யாளர் ஆர். கருணாகரன்: உணவுப் பொருட்​கள், அன்​றாட வீட்டு உபயோகப் பொருட்​கள், ஆடைகள் உள்​ளிட்​ட​வற்​றிற்கு ஜிஎஸ்டி குறைக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்​கள் மிகுந்த பலன் அடைவர். இருசக்கர வாக​னங்​களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு தொழிலா​ளர்​களுக்கு பலனை அளிக்​கும்​. மொத்​தத்​தில்​ இந்​த வரி குறைப்​பு பொது​மக்​களுக்​கு மகிழ்ச்​சி​யை அளிக்​கக்​கூடியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x