Published : 19 Sep 2025 08:10 AM
Last Updated : 19 Sep 2025 08:10 AM

பிரதமர் மோடியுடன் பெப்சிகோ சிஇஓ சந்திப்பு: இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்க உறுதி

புதுடெல்லி: மூன்று நாள் பயண​மாக இந்​தியா வந்த பெப்​சிகோ குளோபல் நிறு​வனத்​தின் தலை​வரும், தலைமை செயல் அதி​காரி​யு​மான ரமோன் லகு​வார்ட்டா பிரதமர் நரேந்​திர மோடியை கடந்த செவ்​வாய்க்​கிழமை சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது, இந்​திய சந்​தைக்​கான தனது நிறு​வனத்​தின் நீண்​ட​கால உறு​திப்​பாட்​டைப் பற்றி அவர் விவா​தித்​தார். இந்​தி​யா​வில் முதலீட்டை அதி​கரிக்க உள்​ள​தாக​வும் உறுதி அளித்​தார்.

பெப்​சிகோ நிறு​வனம் லிங்​டுஇன் தளத்​தில் நேற்​று​முன்​தினம் தெரி​வித்​துள்​ள​தாவது: பெப்​சிகோ தலை​வர் லகு​வார்ட்​டாவுடன் நிறு​வனத்​தின் உலகளா​விய நிர்​வாக குழு உறுப்​பினர்​கள் சென்று பிரதமர் மோடியை சந்​தித்​தனர். அப்​போது, பெப்​சிகோ​வின் இந்​தி​யா​வுக்​கான நீண்​ட​கால உறு​திப்​பாட்டை வலுப்​படுத்​து​வது, உற்​பத்​தி, நிலைத்​தன்​மை, புதுமை மற்​றும் சமூக மேம்​பாடு போன்ற துறை​களில் ஒத்​துழைப்​புக்​கான வாய்ப்​பு​களை ஆராய்​வது தொடர்​பாக விவா​திக்​கப்​பட்​டது.

பெப்​சிகோ​வின் வாரி​யத்​திற்கு கிட்​டத்​தட்ட ஏழு ஆண்​டு​களாக லகு​வார்ட்டா தலைமை தாங்கி வந்​தா​லும், பிரதமருட​னான அவரின் சந்​திப்பு இது முதல் முறை​யாகும். பெப்​சிகோ இந்​தி​யா​வின் தலைமை நிர்​வாக அதி​காரி ஜக்​ருத் கோடேச்​சா​வும் இந்​தக் கூட்​டத்​தில் கலந்து கொண்​டார். பெப்​சிகோவை பொறுத்​தவரை அதன் வளர்ச்​சிக்​காக முதலீடு செய்ய உறு​தி பூண்​டுள்ள சந்​தைகளில் இந்​தியா மிக முக்​கிய​மான ஒன்​றாகும்.

அசாம், ம.பி.யில் புதிய ஆலை அதன்​படி நிறு​வனம் இரண்டு புதிய ஆலைகளில் முதலீடு செய்​கிறது. அசாமில் ஒரு உணவு ஆலை மற்​றும் மத்​தி​யப் பிரதேசத்​தில் ஒரு செறிவூட்​டப்​பட்ட ஆலைக்​காக இந்த முதலீடு மேற்​கொள்​ளப்​படு​கிறது. உத்​தர பிரதேசத்​தில் மதுரா அருகே புதி​தாக சிற்​றுண்டி ஆலை அமைக்​க​வும் கணிச​மான முதலீட்டை பெப்​சிகோ மேற்​கொண்​டுள்​ளது. இவ்​வாறு தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x