Published : 19 Sep 2025 07:57 AM
Last Updated : 19 Sep 2025 07:57 AM

இந்தியா மீதான 25% அபராத வரியை அமெரிக்கா நீக்கலாம்: அனந்த நாகேஸ்​வரன் தகவல்

புதுடெல்லி: இந்​தியா மீதான 25% அபராத வரியை வரும் நவம்​பர் 30-ம் தேதிக்​குப் பிறகு அமெரிக்கா விலக்​கிக் கொள்ள அதிக வாய்ப்​புள்​ள​தாக தலைமை பொருளா​தார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்​வரன் நம்​பிக்கை தெரி​வித்​துள்​ளார். இந்​தியா மற்​றும் அமெரிக்கா இடையே நடை​பெற்று வரும் பேச்​சு​வார்த்​தைகளுக்கு மத்​தி​யில் வர்த்தக கட்​டுப்​பாடு​கள் தளர்த்​தப்​படு​வதற்​கான வாய்ப்பை தலைமை பொருளா​தார ஆலோசகரின் கருத்​துகள் வெளிப்​படுத்​து​வ​தாக அமைந்​துள்​ளது.

கொல்​கத்​தா​வில் வணி​கர்​களின் வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை சபை ஏற்​பாடு செய்த நிகழ்​சி​யொன்​றில் தலைமை பொருளா​தார ஆலோசகர் அனந்த நாகேஸ்​வரன் பேசி​ய​தாவது: இந்​திய பொருட்​களின் இறக்​கு ம​திக்கு அமெரிக்கா 25 சதவீத பரஸ்பர வரி விதித்​தது. அதே போன்று மீண்​டும் 25 சதவீத அபராத வரியை இந்​தியா மீது அமெரிக்கா விதித்​துள்​ளது. இரண்​டும் எதிர்​பார்க்​கப்​ப​டாத ஒன்​று. புவி​சார் அரசி​யல் சூழ்​நிலைகள் இரண்​டாவது 25 சதவீத அபராத வரி விதிப்​புக்கு வழி​வகுத்​திருக்​கலாம் என்று நான் இன்​னும் நம்​பு​கிறேன்.

ஆனால், கடந்த இரண்டு வாரங்​களில் ஏற்​பட்​டுள்ள சமீபத்​திய முன்​னேற்​றங்​களை கருத்​தில் கொண்​டால் நவம்​பர் 30-க்​குப் பிறகு அபராத வரி விதிப்பு இருக்​காது என்றே நம்​பு​கிறேன். இந்​தியா மற்​றும் அமெரிக்கா இடை​யில் நடை​பெற்று வரும் தொடர்ச்​சி​யான பேச்​சு​வார்த்​தைகள் மூலம் அடுத்த இரண்டு மாதங்​களில் அபராத வரி மற்​றும் பரஸ்பர வரி குறித்து ஒரு முழு​மை​யான தீர்வு எட்டப்​படும் என்​பது எனது தனிப்​பட்ட கருத்​து.

தற்​போது ஆண்​டு​தோறும் 850 பில்​லியன் அமெரிக்க டாலர்​களாக இருக்​கும் இந்​தி​யா​வின் ஏற்​றுமதி வளர்ச்சி விரை​வில் 1 டிரில்லியன் டாலரை எட்​டும் நிலை​யில் உள்​ளது. இது மொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில் 25 சதவீதத்தை பிர​தி​நி​தித்​து​வப்​படுத்​துகிறது. இது ஒரு ஆரோக்​கிய​மான, திறந்​தநிலை பொருளா​தா​ரத்தை குறிப்​ப​தாக அமைந்​துள்​ளது. இவ்​வாறு அனந்​த நாகேஸ்​வரன்​ பேசினார்​.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x