Published : 17 Sep 2025 05:59 AM
Last Updated : 17 Sep 2025 05:59 AM

மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சம்: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.82 ஆயிரத்தைத் தாண்டியது

சென்னை: சென்​னை​யில் ஒரு பவுன் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று ரூ.82 ஆயிரத்தை தாண்​டி, வரலாறு காணாத புதிய உச்​சத்தை பதிவு செய்​தது. பவுனுக்கு ரூ.560 உயர்ந்​து, ரூ.82,240-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில், தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. அதன் அடிப்​படை​யில், கடந்த மாதம் 26-ம் தேதி முதல், தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்​தது.

குறிப்​பாக, அமெரிக்​கா​வில் இறக்​குமதி செய்​யப்​படும் இந்​திய பொருட்​களுக்கு 50 சதவீதம் வரி விதிப்​பு, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாய் மதிப்பு சரிவு உள்​ளிட்ட காரணங்​களால், தங்​கம் விலை அதிரடி​யாக உயர்ந்​து, நாள்​தோறும் வரலாறு காணாத புதிய உச்​சத்தை பதிவு செய்​தது.

அந்த வகை​யில், செப்​.6-ம் தேதி பவுன் தங்​கம் ரூ.80,040 ஆகவும், செப்​.9-ம் தேதி ரூ.81,200 ஆகவும், செப்​.12-ம் தேதி ரூ.81,920 ஆகவும் அடுத்​தடுத்து விலை உயர்ந்​து, வரலாறு காணாத புதிய உச்​சத்தை பதிவு செய்​தது. இதன்​பிறகு, தங்​கம் விலை சற்று குறைந்​திருந்​தது.

இந்​நிலை​யில், சென்​னை​யில் ஒரு பவுன் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று ரூ.82 ஆயிரத்தை தாண்​டி, வரலாறு காணாத புதிய உச்​சத்தை பதிவு செய்​தது. அதாவது, பவுனுக்கு ரூ.560 உயர்ந்​து, ரூ.82,240-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. ஒரு கிராம் தங்​கம் ரூ.70 உயர்ந்​து, ரூ.10,280-க்கு விற்​கப்​பட்​டது. 24 காரட் சுத்த தங்​கம் ரூ.89,712 ஆக இருந்​தது.

இது​போல, வெள்ளி கிரா​முக்கு ரூ.1 உயர்ந்து ரூ.144 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ரூ.1.44 லட்​ச​மாகவும் இருந்​தது. தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரு​வ​தால், பண்​டிகை மற்​றும் குடும்ப நிகழ்ச்​சிக்​காக நகை வாங்க எண்​ணி​யிருந்த பொது​மக்​கள் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர்.

தங்​கம் விலை உயர்வு குறித்​து, சென்னை தங்​கம் மற்​றும் வைர நகை வியா​பாரி​கள் சங்​கப் பொதுச் செய​லா​ளர் எஸ்​.​சாந்​தக் குமார் கூறுகை​யில், “பு​வி​சார் அரசி​யலே தங்​கம் விலை உயர்​வுக்கு முக்​கியக் காரண​மாகும். குறிப்​பாக, அமெரிக்க அதிபரின் வரிக் கொள்கை முக்​கிய​மாகும். வரும்​ நாட்​களில்​ தங்​கம்​ விலை உயர​வே வாய்​ப்பு உள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x