Published : 15 Sep 2025 09:04 AM
Last Updated : 15 Sep 2025 09:04 AM

வருமான வரி கணக்கு 6 கோடி பேர் தாக்கல்

புதுடெல்லி: வரு​மான வரி கணக்கு தாக்​கல் செய்​வதற்​கான காலக்​கெடு இன்​றுடன் முடிவடைய உள்ள நிலை​யில் 2025-26-ம் நிதியாண்​டுக்கு வரு​மான வரி கணக்​கு​களை தாக்​கல் செய்​யும் பணி​களில் வரி செலுத்​து​வோர் மும்​முர​மாக ஈடு​பட்​டுள்​ளனர். இந்த நிலை​யில், இது​வரை 6 கோடிக்​கும் அதி​க​மான வரு​மான வரி கணக்​கு​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளாதக வரு​மான வரி துறை அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

மேலும், அவகாசம் வழங்​கப்​படுமா என்ற எதிர்​பார்ப்பு எழுந்​துள்ள நிலை​யில் செப்​. 15 காலக்​கெடு இன்​றுடன் நிறைவடைகிறது. வரு​மான வரி துறை தங்​களது அதி​காரப்​பூர்வ எக்ஸ் கணக்​கில் நேற்று முன்​தினம் தெரி​வித்​துள்​ள​தாவது: தற்​போது வரை 6 கோடிக்​கும் அதி​க​மான வரு​மான வரி கணக்​கு​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன. கடைசி நேர நெருக்​கடிகளை தவிர்க்க முன்​கூட்​டியே வரி தாக்​கல் செய்​வதன் முக்​கி​யத்​து​வத்தை விளக்​கும் வீடியோக்​களை வரு​மான வரி துறை தொடர்ந்து வெளி​யிட்டு வரு​கிறது. கடந்த சில ஆண்​டு​களாகவே வரு​மான வரி கணக்கு தாக்​கல் செய்​வது அதி​கரித்து வரு​கிறது.

இவ்​வாறு வரு​மான வரி துறை தெரி​வித்​துள்​ளது. இதனிடையே, போர்ட்​டல் செயல்​பாட்​டில் மந்​தம், படிவங்​களை பதி​விறக்​கு​வ​தில் சிக்​கல், வடகிழக்கு மாநிலங்​களி்ல் பெய்த கனமழை ஆகிய​வற்​றால் செப். 15-க்​குள் வரி தாக்​கல் செய்​வ​தில் சிரமம் ஏற்​பட்​டுள்​ளது. எனவே, இதற்​கான காலக்​கெடுவை டிசம்​பர் 31 வரை நீட்​டிக்க வேண்​டும் என்று இந்​திய வரி​வி​திப்பு அட்​வகேட்​ஸ் அசோசி​யேசன்​ வலி​யுறுத்​தி உள்​ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x