Published : 13 Sep 2025 06:40 AM
Last Updated : 13 Sep 2025 06:40 AM

பி.எப். பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கலாம்: தீபாவளிக்கு முன்பு பயனாளர்களுக்கு பரிசு

புதுடெல்லி: வங்​கி​களை போலவே பி.எப்​.பணத்தை ஏடிஎம்​ மூலம் எடுக்​கும் வசதியை தீபாவளிக்கு முன்பு அறி​முகப்​படுத்த மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

வருங்​கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) அமைப்​பு, ஊழியர்​களுக்கு பல்​வேறு வசதி​களை அறி​முகப்​படுத்தி வரு​கிறது. அதன்​படி, வரும் தீபாவளிக்கு முன்​பாக, ஏடிஎம்​ மூலம் பணம் எடுக்​கும் வசதியை அறி​முகப்​படுத்த திட்​ட​மிட்​டுள்​ளது. இதுதொடர்​பாக மத்​திய தொழிலா​ளர் மற்​றும் வேலை​வாய்ப்​புத் துறை அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வி​யா,உயர​தி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்தி வரு​கிறார்.

இபிஎப்ஓ நிறு​வனம் 3.0 திட்​டத்தை அறி​முகப்​படுத்த திட்​ட​மிட்​டுள்​ளது. இதற்​கான கூட்​டம் அடுத்த மாதம் நடை​பெற உள்​ளது. அப்​போது, வங்கி சேவை​களை போலவே பி.எப். சேவை​களை​யும் மேம்​படுத்​து​வது குறித்து விரி​வாக ஆலோ​சனை நடை​பெற உள்​ளது. அதில் பி.எப். கணக்​கில் இருந்து குறிப்​பிட்ட தொகையை ஏடிஎம்​ மூலம் பெறும் வசதி, அல்​லது யுபிஐ மூலம் பணப் பரிவர்த்​தனை செய்​யும் வசதி​களை அறி​முகப்​படுத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

மேலும், ஓய்​வூ​தி​யத்தை உயர்த்த வேண்​டும் என்று வர்த்தக சங்​கங்​கள் நீண்ட நாட்​களாக வலி​யுறுத்தி வரு​கின்​றன. அதன்​படி, பி.எப் ஓய்​வூ​தி​யத்தை ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை உயர்த்​து​வது குறித்து இபிஎப்​ஓ.​வின் சென்ட்​ரல் போர்ட் ஆப் ட்ரஸ்​டீஸ் பரிசீலிக்க உள்​ளது.

இதற்​கிடை​யில், பி.எப். பணம் என்​பது ஓய்வு பெற்ற பிறகு ஊழியர்​களுக்கு பாது​காப்பு வழங்​கு​வதற்கு உள்​ளது. அந்த பணத்தை ஏடிஎம் அல்​லது யுபிஐ மூலம் எடுப்​ப​தற்கு வர்த்தக சங்​கங்​கள் எதிர்ப்பு தெரிவிக்​கலாம் என்று கூறப்​படு​கிறது. ஏடிஎம் மூலம் பணத்தை எடுக்​கும் வசதி அறி​முகப்​படுத்​தப்​பட்​டால், பி.எப். சேமிப்​பின் அடிப்​படை நோக்​கமே சிதைந்​து​விடும் என்று வர்த்தக சங்​கத்​தின் கூறிவரு​கின்​றனர். தற்​போது மருத்​துவ சிகிச்​சை, கல்​வி, திரு​மணம், வீடு கட்​டு​வது போன்​றவற்​றுக்கு ரூ.5 லட்​சம் வரை பி.எப்​.பில் இருந்து பணத்தை எடுக்​கும் வசதி உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x