Published : 11 Sep 2025 07:08 AM
Last Updated : 11 Sep 2025 07:08 AM

இந்திய பொருளாதாரம் 6.9% வளரும்: நடப்பு நிதியாண்டின் கணிப்பை உயர்த்தியது ‘பிட்ச்’

மும்பை: நடப்பு நிதி​யாண்​டில் (2025 - 26) இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி விகிதத்​தை, 6.5 சதவீதத்​தில் இருந்து 6.9 சதவீத​மாக ‘பிட்ச்’ நிறு​வனம் உயர்த்தி உள்​ளது. அமெரிக்​காவை தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் பிரபல ‘பிட்ச்’ ரேட்​டிங் நிறு​வனம், இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி (ஜிடிபி) குறித்து சமீபத்​தில் கணிப்பு ஒன்றை வெளி​யிட்​டது.

அதில், இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி நடப்பு நிதி​யாண்​டில் (2025 - 2026) 6.9 சதவீத​மாக இருக்​கும் என்று கணித்​துள்​ளது. முன்னதாக இந்​திய பொருளா​தார வளர்ச்சி 6.5 சதவீத​மாக இருக்​கும் என்று இந்​நிறு​வனம் கூறி​யிருந்​தது. தற்​போது அதை உயர்த்தி அறி​வித்​துள்​ளது.

கடந்த ஜூன் மாதத்​துடன் முடிவடைந்த காலாண்​டில், எதிர்​பார்த்​ததைவிட வலு​வான பொருளா​தார வளர்ச்​சி, அதி​கரித்து வந்த சேவை​கள், நுகர்வு அதி​கரிப்பு ஆகிய​வற்​றால் இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி விகிதத்தை மாற்​றிய​தாக பிட்ச் நிறு​வனம் கூறியுள்​ளது.

2025-26 நிதி ஆண்​டின் முதல் காலாண்​டில் (ஏப்​ரல் - ஜூன்) இந்​தி​யா​வின் ஜிடிபி வளர்ச்சி 7.8% ஆக அதி​கரித்​தது. இது இந்​திய ரிசர்வ் வங்கி கணித்த 6.5% வளர்ச்​சியை விட அதி​கம். மேலும் நடப்பு நிதி ஆண்​டின் முதல் காலாண்​டுக்கு முந்​தைய 3 மாதங்​களில் 7.4 சதவீத​மாக இருந்​தது. இது பிட்ச் நிறு​வனம் கணித்த 6.7 சதவீதத்தை விட அதி​கம்.

இந்​திய பொருளா​தார வளர்ச்​சிக்கு உள்​நாட்​டில் அதி​கரித்து வரும் தேவை, நிலை​யான வரு​வாய் போன்​றவை காரணங்​கள் என்று பிட்ச் நிறுனம் கூறி​யுள்​ளது. இந்​தியா-அமெரிக்கா இடை​யில் வர்த்தக உறவில் சிக்​கல் அதி​கரித்​துள்​ளது. எனினும், இந்த ஆண்டு பிற்​பகு​தி​யில் இந்​திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 25 புள்​ளி​கள் குறைத்து 2026 நிதி ஆண்​டில் நிலை​யான வளர்ச்​சிக்கு நடவடிக்கை எடுக்​கும் என்று எதிர்​பார்ப்​ப​தாக பிட்ச்​ ரேட்​டிங்​ கூறி​யுள்​ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x