Published : 10 Sep 2025 07:29 AM
Last Updated : 10 Sep 2025 07:29 AM

இந்திய நிறுவனங்களை வரவேற்கிறோம்: இந்​தி​யா​வுக்​கான சீன தூதர் ஷூ பெய்ஹோங் பேச்சு

புதுடெல்லி: இந்​தி​யா​வுக்​கான சீன தூதர் ஷு பெய்​ஹோங் கூறிய​தாவது: நடப்​பாண்​டின் முதல் 7 மாதங்​களில் இந்​தியா மற்​றும் சீனா​வுக்கு இடையி​லான பரஸ்பர வர்த்​தகம் 88 பில்​லியன் டாலரை எட்​டி​யுள்​ளது.

இது, கடந்​தாண்டு இதே கால​கட்​டத்​தில் மேற்​கொள்​ளப்​பட்ட வர்த்​தகத்​துடன் ஒப்​பிடும்​போது 10.5 சதவீதம் அதி​க​மாகும். இந்​திய நிறு​வனங்​களைப் பொருத்​தவரை​யில் இன்​னும் அதி​க​மாக வரவேற்​ப​தற்கு சீனா தயா​ராக உள்​ளது. அதேபோன்​று, சீன நிறு​வனங்​களுக்கு இந்​தி​யா​வில் பாகுபாடற்ற வர்த்தக சூழல் இருக்​கும் என்​பதை நம்​பிக்​கை​யுடன் பார்க்​கிறோம்.

வளர்ச்சி உத்​தி​களின் ஒருங்​கிணைப்பை வலுப்​படுத்​த​வும், இந்​தி​யா​வுடன் நவீனமய​மாக்​கலில் அனுபவத்தை பகிர்ந்து கொள்​ள​வும் சீனா தயா​ராக உள்​ளது. இந்​திய நிறு​வனங்​கள் தங்​கள் தயாரிப்​பு​களை விளம்​பரப்​படுத்​த​வும், சீனா​வில் முதலீடு செய்​வதை​யும் நாங்​கள் வரவேற்​கிறோம்.

மேலும், சீன நிறு​வனங்​களுக்கு தேவை​யான பாகு​பாடற்ற நியாய​மான வர்த்தக சூழலை வழங்க முடி​யும் என்று நாங்​கள் நம்​பு​கிறோம். வரலாற்றை நம்​மால் மாற்​ற​முடியாது. ஆனால் எதிர்​காலத்தை நாம் சிறந்​த​முறை​யில் வடிவ​மைக்க முடி​யும். இவ்​வாறு ஷு பெய்​ஹோங் தெரி​வித்​தார். இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி​வி​திப்பை அமல்​படுத்​தி​யுள்​ள நிலை​யில்​ சீ​னா இந்​த கருத்​தை வெளிப்​படுத்​தி​யுள்​ளது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x