Published : 06 Sep 2025 05:34 AM
Last Updated : 06 Sep 2025 05:34 AM

ஒரேநாளில் பத்திரப் பதிவு மூலம் ரூ.274 கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை: ஆவணி மாத சுபமுகூர்த்த ​நாளான நேற்று முன்​தினம் செப்​.4-ம் தேதி ஒரே​நாளில் பத்​திரப்​ப​திவு வரலாற்​றில் இதுவரை இல்​லாத அளவு ரூ.274.41 கோடி வரு​வாய் ஈட்​டப்​பட்​டுள்​ள​தாக அமைச்​சர் பி.மூர்த்தி தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: பொது​மக்​களின் கோரிக்​கையை ஏற்​று, ஆவணி மாதம் சுப​முகூர்த்த தின​மான நேற்று முன்​தினம் செப்​.4-ம் தேதி கூடு​தல் முன்​ப​திவு டோக்​கன்​கள் ஒதுக்​கப்​பட்​டன. இதன்மூலம், பதிவுத்​துறை வரலாற்​றில் இது​வரை​யில் இல்​லாத அளவில் இந்த 2025-26-ம் நிதி​யாண்​டில், ஒரேநாளில் அரசுக்கு ரூ.274.41 கோடி வரு​வாய் ஈட்டி பதிவுத்​துறை புதிய மைல்​கல்லை எட்​டி​யுள்​ளது.

இதற்கு முன்​ன​தாக, இதே 2025-26-ம் நிதி​யாண்​டில், கடந்​த ஏப்​.30-ம் தேதி பதிவுத்​துறை​யில் ஒரேநாளில் அரசுக்கு ரூ.272.32 கோடி வரு​வாய் ஈட்​டப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x