Published : 05 Sep 2025 09:55 AM
Last Updated : 05 Sep 2025 09:55 AM

ஜிஎஸ்டி 5%, 0 ஆக குறையும் பொருட்கள்; 40% ஆக உயரும் பொருட்கள் - ஒரு பட்டியல்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி அடுக்குகளை 5% மற்றும் 18% என இரண்டாக குறைக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குறைக்கப்பட்ட இந்த புதிய வரி விகிதங்கள் நவராத்திரி முதல் நாளான செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி குறைப்பால் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும், ஏசி, டிவி, சலவை இயந்திரங்களின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று, தனிநபர்கள் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களுக்கும் வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்திய பொருட்களின் ஏற்றுமதிக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசின் இந்த ஜிஎஸ்டி குறைப்பு நடவடிக்கை உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க உதவும் என்பதுடன் பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி 5% மற்றும் பூஜ்ஜியம் ஆக குறையும் பொருட்கள்:

தினசரி அத்தியாவசிய பொருட்கள் - * ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை, குளியல்சோப், டூத் பிரஷ், ஷேவிங் கிரீம் (18% > 5%) | வெண்ணெய், நெய், சீஸ், பால் பொருட்கள், பாக்கெட் செய்யப்பட்ட உப்பு, கார வகை ஸ்நாக்ஸ், குழந்தைகளுக்கான ஃபீடிங் பாட்டில், நாப்கின், டயாப்பர் (12% > 5%) | * பாத்திரங்கள், தையல் இயந்திரங்கள் மற்றும் அதன் பாகங்கள் (12% 5%)

மருத்துவம்: * தனிநபர் சுகாதாரம் மற்றும் ஆயுள் காப்பீடு (18% > 0) | தெர்மா மீட்டர்கள் (18% > 5%) | மருத்துவ தர ஆக்சிஜன், நோயறிதல் கருவிகள், குளுக்கோ மீட்டர்கள் மற்றும் சோதனை ஸ்ட்ரிப்புகள், மூக்கு கண்ணாடிகள் (12% > 5%)

பண்ணை மற்றும் வேளாண்மை: டிராக்டர் டயர்கள் மற்றும் டிராக்டர் பாகங்கள் (18% > 5%) | டிராக்டர்கள் (12% 5%) உயிரி பூச்சிக்கொல்லிகள், நுண்ணூட்டச் சத்துகள், சொட்டு நீர் பாசன அமைப்புகள், தெளிப்பான்கள், விவசாய, தோட்டக்கலை மற்றும் வனவியல் இயந்திரங்கள் (12% > 5%)

கல்வி: வரைபடங்கள், விளக்கப்படங்கள், உலக உருண்டைகள் | பென்சில்கள், ஷார்ப்னர், கிரேயான்கள், பசை, உடற்பயிற்சி புத்தகங்கள், குறிப்பேடுகள் (12% > 0) | அழிப்பான்கள் (5% > 0)

ஜிஎஸ்டி 40% ஆக உயரும் பொருட்கள்:

புகையிலை, பான் மசாலா: பான் மசாலா, குட்கா, மெல்லும் புகையிலை, சிகரெட், சுருட்டுகள்.

பானங்கள்: கார்பனேட்டேடு பானங்கள், சர்க்கரையுடன் கூடிய குளிர் பானங்கள், காஃபின் கலந்த கார்பனேட்டேடு பானங்கள்

ஆடம்பர கார்கள், பைக்குகள்: *1200 சிசிக்கு மேல் இன்ஜின் திறன் கொண்ட பெட்ரோல் கார்கள் | 1500 சிசிக்கு மேல் இன்ஜின் திறன் கொண்ட டீசல் கார்கள் | 350 சிசிக்கு மேல் இன்ஜின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள்.

பிற பொருட்கள், சேவைகள்: தனிப்பட்ட ஹெலிகாப்டர்கள், விமானங்கள், படகுகள், நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, கரி, ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டு சேவைகள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x