Published : 04 Sep 2025 01:06 AM
Last Updated : 04 Sep 2025 01:06 AM
புதுடெல்லி: ஜிஎஸ்டி வரிவிகித மாற்றம் அமலுக்கு வருவதையொட்டி பல பொருட்களின் விலை குறையவும் மேலும் பல பொருட்களின் விலை உயரவும் உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு வரி அடுக்குகள் 18%, 5% என இரு அடுக்குகளாக குறையும் போது பயனடையும் துறைகள்:
ஆட்டோமொபைல்: கார், மோட்டார் சைக்கிள் ஜிஎஸ்டி 28% -லிருந்து 18% ஆக குறையும்.
விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்கு: தங்கும் விடுதிகள், சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி 12%-லிருந்து 5%- ஆக குறையும்.
காப்பீட்டுக்கு முழு விலக்கு: தனி நபர் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்றாட பயன்பாட்டு பொருட்கள்: மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களான பனீர், பீட்ஸா, பிரட், பழச்சாறு, இளநீர், பட்டர், சீஸ், பாஸ்தா, ஐஸ்கிரீம் பொருட்களுக்கான ஜிஎஸ்டி 12% -லிருந்து 5% ஆக குறையும். பற்பசை, ஷாம்பூ, ஆயில், சோப்புக்கான வரி 18%-லிருந்து 5% ஆகவும் குறையும்.
விலை உயரும் பொருட்கள்: புகையிலை, பான்மசாலா, ஆடம்பர மோட்டார் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 40 சதவீதமாக அதிகரிக்கும்.
ரூ.20-40 லட்சம் விலையுள்ள மின்சார கார்களுக்கு ஜிஎஸ்டி 5% லிருந்து 18 சதவீதமாக உயரும். ரூ.40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆடம்பர மின் வாகனங்களுக்கு 40% வரி விதிக்கப்படும்.
ஆடைகளுக்கு… ரூ.2,500-க்கு அதிகமான ஆடைகளுக்கான ஜிஎஸ்டி 12%லிருந்து 18%-ஆக உயரும். நிலக்கரி உள்ளிட்ட சில எரி பொருட்களுக்கான வரி 5%-லிருந்து 18%-ஆக அதிகரிக்கும்.
இந்த ஜிஎஸ்டி மாற்றங்களால் ரூ.50,000 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் உள்நாட்டு சந்தையில் நுகர்வு நடவடிக்கைகள் வேகமெடுக்கும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT