Published : 02 Sep 2025 09:13 AM
Last Updated : 02 Sep 2025 09:13 AM

​யுபிஐ வரலாற்றில் சாதனை: ஆகஸ்டில் ரூ.24.85 லட்சம் கோடி பணப் பரிவர்த்தனை

புதுடெல்லி: இந்​தி​யா​வில் யுபிஐ வரலாற்​றில் முதல்​முறை​யாக கடந்த ஆகஸ்ட் மாதம் 20 பில்​லியன் பரிவர்த்​தனை​ நடை​பெற்​றுள்​ளன.

இது தொடர்​பாக தேசிய பேமென்ட்ஸ் கார்ப்​பரேஷன் ஆப் இந்​தியா (என்​பிசிஐ) புள்​ளி​விவரம் நேற்று வெளி​யானது. இதன்​படி நாட்​டில் யுபிஐ பரிவர்த்​தனை முதல்​முறை​யாக கடந்த ஆகஸ்ட் மாதம் 20.01 பில்​லியனை எட்​டியது. இது ஜூலை மாதத்தை விட (19.47 பில்​லியன்) 2.8% அதி​கம் ஆகும். யுபிஐ மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.24.85 லட்​சம் கோடி மதிப்​புள்ள பரிவர்த்​தனை​கள் நடந்​துள்​ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் சராசரி தினசரி பரிவர்த்​தனை 645 மில்​லிய​னாக (ஜூலை​யில் 628 மில்​லியன்) உயர்ந்​துள்​ளது.

மேலும் சராசரி தினசரி பரிவர்த்​தனை மதிப்பு ரூ.80,177 கோடி​யாக இருந்​தது. யுபிஐ கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி ஒரே நாளில் 700 மில்​லியன் பரிவர்த்​தனை​களை கடந்து சாதனை படைத்​திருந்​தது. பாரத ஸ்டேட் வங்​கி​யின் சமீபத்​திய ஆய்​வின்​படி கடந்த ஜூலை​யில் டிஜிட்​டல் பணம் செலுத்​து​வ​தில் மகா​ராஷ்டிரா 9.8 சதவீத பங்​களிப்​புடன் முதல் இடத்​தில் இருந்​தது. அதைத் தொடர்ந்து கர்​நாடகா (5.5 சதவீதம்), உத்​தரபிரதேசம் (5.3 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x