Published : 01 Sep 2025 05:19 AM
Last Updated : 01 Sep 2025 05:19 AM

எத்தனால் கலப்பு எரிபொருள் மைலேஜை பாதிக்கும்: வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல்

புதுடெல்லி: நாட்​டில் சுத்​த​மான எரிசக்​தியை பயன்​படுத்த வேண்​டும் என்​ப​தில் பிரதமர் நரேந்​திர மோடி அதிக கவனம் செலுத்தி வரு​கிறார். அதன் ஒரு பகு​தி​யாக, 2025-ம் ஆண்​டில் எரிபொருளில் 20% எத்​த​னால் கலப்​ப​தற்கு இந்​தியா பல ஆண்​டு​களுக்கு முன்பே இலக்கை நிர்​ண​யித்​தது. இது E20 என அழைக்​கப்​படு​கிறது.

ஆனால் இது வாகன செயல்​திறன் மற்​றும் நீடித்த உழைப்​பில், குறிப்​பாக பழைய வாக​னங்​களில் அதன் தாக்​கம் குறித்து ஓட்​டுநர்​களிடையே சர்ச்சை ஏற்​பட்​டுள்​ளது.

இந்த நிலை​யில் இந்​திய ஆட்டோமொபைல் உற்​பத்​தி​யாளர்​கள் சங்​கம் (எஸ்​ஐஏஎம்) நிர்​வாக இயக்​குநர் பி.கே.​பானர்ஜி தெரி​வித்​துள்​ள​தாவது: பழைய வாக​னங்​களில் E20 எரிபொருளைப் பயன்​படுத்​து​வது மைலேஜை குறைக்​கிறது. ஆனால் அது ஆபத்து அல்ல. பாது​காப்​பானது. இப்​போது மில்​லியன் கணக்​கான வாக​னங்​கள் E20 எரிபொருளில் நீண்ட கால​மாக இயங்கி வரு​கின்​றன.

அதனால் ஒரு வாக​னத்​தில் கூட பழுதடைதல் அல்​லது இயந்​திர செயலிழப்பு பதி​வாக​வில்​லை. சிக்​கல்​கள் ஏற்​பட்​டால், உத்​தர​வாதம் மற்​றும் காப்​பீட்டு கோரிக்​கைகள் அடிப்​படை​யில் நிறு​வனங்​களால் முழு​மை​யான தீர்வு காணப்​படும். இவ்​வாறு பானர்ஜி தெரி​வித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x