Last Updated : 01 Sep, 2025 01:23 AM

1  

Published : 01 Sep 2025 01:23 AM
Last Updated : 01 Sep 2025 01:23 AM

ஏதர் எனர்ஜி நிறுவனம் சார்பில் குறைந்த விலையில் குடும்ப பயன்பாட்டுக்கான ‘ஏதர் இஎல்-01’ மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்!

ஏதர் எனர்ஜி நிறு​வனம் சார்​பில் குறைந்த விலை​யில் குடும்ப பயன்​பாட்​டுக்​கான ஏதர் ‘இஎல்​01’ மின்​சார ஸ்கூட்​டர், ஏதர் ‘ரெடெக்​ஸ்’ (மோட்டோ வகை) மின்​சார ஸ்கூட்​டர்​கள் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதனை அடுத்த ஆண்டு சந்​தைப்​படுத்​து​வதற்​கான பணி​களில் ஏதர் எனர்ஜி நிறுவனம் தீவிரம் காட்டி வரு​கிறது.

நாட்​டின் முன்​னணி மின்​சார இருசக்கர வாகன உற்​பத்தி நிறு​வனங்​களில் ஒன்று ஏதர் எனர்ஜி நிறு​வனம். இந்​நிறு​வனம், பல்​வேறு முன்​னணி மின்​சார இருசக்கர வாகன நிறு​வனங்​களு​டன் போட்​டி​யிட்டு தங்​களு​டைய 450 சீரிஸ், ரிஸ்டா எலக்ட்​ரிக் ஸ்கூட்​டர்​களை விற்​பனை செய்து வரு​கிறது. இந்​நிலை​யில், ஏதர் மின்​சார ஸ்கூட்​டர் பயன்​பாட்​டாளர்​களுக்​கான மூன்​றாவது வரு​டாந்​திர ‘ஏதர் சமூக தினம் 2025’ பெங்​களூரு​வில் ஆக.30-ம் தேதி நடந்​தது.

இந்த நிகழ்ச்​சி​யில் நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் இருந்து ஏதர் மின்​சார ஸ்கூட்​டர் பயனாளர்​கள், இருசக்கர வாகன ஆர்​வலர்​கள் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​றனர். ‘ஏதர் 450’ தொடருக்​குப் பிறகு ஏதரின் முதல் புதிய வாக​னக் கட்​டமைப்பு மற்​றும் அடுத்த தலை​முறை மின்​சார ஸ்கூட்​டர்​களுக்​கான புதிய ‘இஎல் எலக்ட்​ரிக் ஸ்கூட்​டர் இயங்​குதளத்​தை’ ஏதர் சமூக தினத்​தில் அந்​நிறு​வனம் வெளி​யிட்​டது. அந்​தவகை​யில், ‘இஎல் இயங்​குதளம்’ மூலம் தயாரிக்​கப்​பட்ட முதல் குறைந்த விலை மின்​சார ஸ்கூட்​ட​ராக ‘ஏதர் இஎல்​01’ அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது.

குறிப்​பாக, குடும்ப பயன்​பாட்​டுக்கு ஏற்ற வகை​யில், முழு எல்​இடி விளக்​கு​கள், இருக்​கைக்கு அடி​யில் இரண்டு ஹெல்​மெட்​டு​கள் வைக்​கும் வகை​யில் இடைவெளி, பெரிய தொடு​திரை பலகை, 14 இன்ச் சக்​கரங்​கள், மேலும், காப்​புரிமை பெற்ற ஏசி - டிசி தொகுதி ஆகிய​வற்றை ஏதர் இஎல்01 ஸ்கூட்​டர் கொண்​டுள்​ளது. மேலும், இது பராமரிப்பு செல​வை​யும் குறைக்​கும் என ஏதர் நிறு​வனம் நம்​பிக்கை கொண்​டுள்​ளது.

அதோடு, ‘ரெடெக்​ஸ்’ என்ற எதிர்​காலத்​தின் மோட்டோ ஸ்கூட்​டரை​யும் ஏதர் சமூக தினத்​தில் அந்​நிறு​வனம் வாடிக்​கை​யாளர்​களுக்கு அறி​முகப்​படுத்​தி​யது. மற்ற நிறு​வனங்​களின் மின்​சார ஸ்கூட்​டர்​களின் விலையை ஒப்​பிடும்போது, ஏதர் நிறு​வனத்​தின் ஸ்கூட்​டர்​கள் ரூ.1 லட்​சத்​துக்கு அதி​க​மாகவே காணப்​படு​கிறது. எனவே, தற்​போது, அறி​முகம் செய்​யப்​பட்​டுள்ள ஏதர் இஎல்01 ஸ்கூட்​டர் குடும்ப பயன்​பாட்​டுக்கு ஏற்ற வகை​யில், விலை ரூ.1 லட்​சத்​துக்​கும் குறை​வான விலை​யில் சந்​தைப்​படுத்​தப்​படலாம் எனவும் எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

தற்​போது, இந்த ஸ்கூட்​டர்​கள் மக்​களின் பார்​வைக்​காக மட்​டுமே அறி​முகம் செய்​துள்ள நிலை​யில், அடுத்த ஆண்டு சந்​தைப்​படுத்​தும் போது, அதற்​கான விலை பட்​டியலை​யும் அந்​நிறு​வனம் வெளி​யிட இருப்​ப​தாக தெரி​வித்​துள்​ளது.

மேலும், ஏற்​க​னவே பயன்​பாட்​டில் இருக்​கும் ஏதர் ரிஸ்டா மின்​சார ஸ்கூட்​டரில் பல்​வேறு பாது​காப்பு வசதி​களை புதுப்​பித்து ஏதர் நிறு​வனம் அறி​முகம் செய்​துள்​ளது.

குறிப்​பாக, மோச​மான சாலை பகு​தி​யில் ஸ்கூட்​டரை இயக்​கும் போது பள்​ளங்​களை முன்​கூட்​டியே கண்​டறிந்து எச்​சரிப்​பது, விபத்து எச்​சரிக்​கை, திருட்​டில் இருந்து பாது​காப்​பது, க்ரூஸ் கட்​டுப்​பாடு மற்​றும் தொடு​திரை செயல்​பாடு என ஏற்​க​னவே இருக்​கும் வாடிக்​கை​யாளர்​களை மகிழ்விக்​கும் முயற்​சி​யாக ரிஸ்டா மின்​சார ஸ்கூட்​டரின் செயல்​பாடு​களை புதுப்​பித்​துள்​ளது.

இந்​நிலை​யில், ‘இஎல் இயங்​குதளம்’ உற்​பத்தி செல​வு​களை குறைப்​ப​தாக​வும், புது​மை​யான தயாரிப்​பு​களுக்கு வழி​வகுப்​ப​தாக​வும், ஏதர் எனர்ஜி நிறு​வனத்​தின் தலைமை நிர்​வாக அதி​காரி தருண் மேத்தா தெரி​வித்​தார். இது
குறித்து அவர் மேலும் கூறிய​தாவது:

இஎல் இயங்​குதளத்​துடன், ஏதரின் அடுத்​தக்​கட்ட வளர்ச்​சிக்கு நாங்​கள் அடித்​தளம் அமைக்​கிறோம். ‘ஏதர் 450’ சீரிஸ் எங்​களது முதல் அத்​தி​யாத்தை வரையறுத்​தது போல, ‘இஎல்’ எங்​களுக்கு பல வகை அளவு​களில், குறைந்த விலை​யில் மின்​சார ஸ்கூட்​டர்​களை உரு​வாக்க உதவு​கிறது. மேக்ஸி ஸ்கூட்​டர் முதல் ஃபேமிலி ஸ்கூட்​டர் வரை பல்​வேறு வகை​யான ஸ்கூட்​டர்​களை உரு​வாக்​கும் வகை​யில் இந்த ‘இஎல் இயங்​குதளம்’ வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

அந்​தவகை​யில், இந்த ‘இஎல் இயங்​குதளம்’ மூலம் தயாரிக்​கபட்ட முதல் குறைந்த விலை மின்​சார ஸ்கூட்​ட​ராக ‘ஏதர் இஎல்​01’ அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இது, ஏதர் 450, ரிஸ்டா சீரிஸில் பயன்​படுத்​தப்​படும் தற்​போதைய தளத்​தில் இருந்து முற்​றி​லும் வேறு​பட்​டது. அடுத்த ஆண்​டுக்​குள் இதனை சந்​தைப்​படுத்த திட்​ட​மிட்டு வரு​கிறோம்.

அதே​போல், ஏற்​க​னவே பயன்​பாட்​டில் உள்ள ஏதர் ஸ்கூட்​டர்​களுக்கு பல்​வேறு புதிய வசதி​களை புதுப்​பித்​துள்​ளோம். அந்​த வகை​யில், ஸ்கூட்​டரை யாரேனும் இடித்​தாலோ, கீழே விழுந்​தாலோ, அந்த ஸ்கூட்​டரின் உரிமை​யாளரின் செல்​போனுக்கு அலெர்ட் சென்​று​விடும். மேலும், ஏதர் அதிவேக சார்​ஜிங், ஹலோ மற்​றும் குழந்​தைகள் ஹெல்​மெட், க்ரூஸ் கண்ட்​ரோல் போன்ற பல்​வேறு வசதிகளை அறிமுகம் செய்​திருக்​கிறோம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x