Last Updated : 29 Aug, 2025 07:11 AM

1  

Published : 29 Aug 2025 07:11 AM
Last Updated : 29 Aug 2025 07:11 AM

அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் உ.பி. ஆக்ராவின் ரூ.2,500 கோடி ஏற்றுமதி பாதிப்பு

புதுடெல்லி: இந்​தி​யப் பொருட்​கள் மீதான அமெரிக்​கா​வின் 50 சதவீத வரி​வி​திப்​பால் உத்​தரபிரதேச மாநிலம் ஆக்ரா மற்​றும் பிரோ​சா​பாத்​தில் இருந்து ரூ.2,500 கோடி மதிப்​பிலான ஏற்​றுமதி பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

உத்​தரபிரதேச மாநிலம் ஆக்​ரா​வில் இருந்து ஆண்​டு​தோறும் சுமார் ரூ.1,000 கோடி மதிப்​பிலான கைவினைப் பொருட்​கள், சுமார் ரூ.300 கோடி மதிப்​பிலான காலணி​கள், சுமார் ரூ.500 கோடி மதிப்​பிலான ஜவுளி, கம்​பளங்​கள் மற்​றும்பிற பொருட்​கள் அமெரிக்கா​வுக்கு ஏற்​றுமதி செய்​யப்​படு​கின்​றன.

இதன் அரு​கிலுள்ள பிரோ​சா​பாத்​தில் இருந்து சுமார் ரூ.800 கோடி மதிப்​பிலான காலணி​கள் அமெரிக்கா​வுக்கு ஏற்​றும​தி​யாகிறது. இது​போல் இங்கு உற்​பத்​தி​யாகும் கண்​ணாடிப் பொருட்​களில் 60 சதவீதம் அமெரிக்கா​வுக்கு அனுப்பி வைக்​கப்​படு​கிறது. இந்​நிலை​யில் அமெரிக்​கா​வின் 50 சதவீத வரி​வி​திப்​பால் இப்​பொருட்​களின் விலை அந்​நாட்​டில் ஒன்​றரை மடங்கு அதி​கரித்​துள்​ளது. இது நேரடி​யாக இந்​திய தயாரிப்​பாளர்​களை பாதித்​துள்​ளது.

இதுகுறித்து உ.பி. கண்​ணாடி உற்​பத்​தி​யாளர்​கள் மற்​றும் ஏற்​றும​தி​யாளர்​கள் சங்​கத் தலை​வர் முகேஷ் பன்​சால் கூறுகை​யில், “அமெரிக்​கா​விலிருந்து பெரு​மளவு ஆர்​டர்​கள் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளன. புதிய முன்​ப​திவு​களும் தற்​போது செய்​யப்​பட​வில்​லை. இதனால் வரும் செப்​டம்​பர் 3, 4 தேதி​களில் டெல்​லி​யில் நடை​பெறும் ஜிஎஸ்டி கவுன்​சில் கூட்​டத்​தில் எங்​கள் பொருட்​களுக்கு ஜிஎஸ்​டி​யில் விலக்கு அளிக்க வேண்​டும், உள்​நாட்டு சந்​தையைவிரிவுபடுத்த வேண்​டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்​துள்​ளோம்” என்​றார்.

ராஜஸ்​தானிலும் பாதிப்பு: ராஜஸ்​தானிலிருந்து ரத்​தின கற்​கள் மற்​றும் நகைகள் சுமார் ரூ.18,000 கோடிக்கு ஏற்​றுமதி செய்​யப்​படு​கிறது. ஜெய்ப்​பூர் வர்த்​தகர்​களுக்கு அமெரிக்கா மிகப்​பெரிய சந்​தை​யாக உள்​ளது. ஜெய்ப்​பூர் ஒவ்​வொரு ஆண்​டும் சுமார் ரூ.3,200 கோடி மதிப்​புள்ள நகைகள் மற்​றும் வண்ண ரத்​தினங்​களை அமெரிக்கா​வுக்கு ஏற்​றுமதி செய்​கிறது.

இதுகுறித்து ராஜஸ்​தானின் ஜெம் பேலஸ் உரிமை​யாளர் சுதிர் காஸ்​லி​வால் கூறும்​போது, “அமெரிக்கா​வுக்​கான எங்​கள் ஏற்​றுமதி ஆர்​டர்​கள் முற்​றி​லு​மாக நின்​று​விட்​டன. எங்​கள் கடைக்கு வருகை தரும் வெளி​நாட்டு சுற்​றுலாப் பயணி​களில் 70 சதவீதம் பேர் அமெரிக்​கர்​கள். அவர்​கள் இங்கு வாங்​கும் நகைகளுக்கு தங்​கள் நாட்​டில் அதிக வரி செலுத்த வேண்​டும் என்​ப​தால் கொள்​முதல் செய்ய மாட்​டார்​கள்” என்​றார். ஜெய்ப்​பூரின் வர்​த்​தகர்​களுக்​கு அமெரிக்​கா மிகப்​பெரிய சந்​தை​யாக உள்​ளது. இந்​த வருடம் அவர்​களுக்​கு கிறிஸ்​து​மஸ் ஆர்​டர்​ எது​வும்​ இது​வரை வரவில்​லை என கூறப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x