Published : 29 Aug 2025 06:50 AM
Last Updated : 29 Aug 2025 06:50 AM

பருத்தி இறக்குமதிக்கு டிசம்பர் 31 வரை வரிவிலக்கு

புதுடெல்லி: பருத்தி இறக்​குமதி மீதான வரி​விலக்கை டிசம்​பர் 31 வரை 3 மாதங்​களுக்கு மத்​திய அரசு நீட்​டித்​துள்​ளது.

வெளி​நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படும் பருத்​திக்கு மத்​திய அரசு 11 சதவீத இறக்​குமதி வரி விதித்து வந்​தது. இந்​நிலை​யில் அமெரிக்​கா​வின் 50 சதவீத வரி​வி​திப்​பால் பாதிக்​கப்​படும் ஜவுளி ஏற்​றும​தி​யாளர்​களை ஆதரிக்​கும் நோக்​கில் பருத்தி மீதான இறக்​குமதி வரியை செப்​டம்​பர் 30 வரை மத்​திய அரசு ரத்து செய்​திருந்​தது. இந்​நிலை​யில் இந்த வரி​விலக்கு இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து மத்​திய நிதி​யமைச்​சகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஜவுளி ஏற்​றும​தி​யாளர்​களை மேலும் ஆதரிக்​கும் நோக்​கில் பருத்தி (எச்​எஸ் 5201) மீதான இறக்​குமதி வரி விலக்கை செப்​டம்​பர் 30, 2025 முதல் டிசம்​பர் 31, 2025 வரை நீட்​டிக்க மத்​திய அரசு முடிவு செய்​துள்​ளது.

5 சதவீத அடிப்​படை சுங்க வரி, 5 சதவீத விவ​சாய உள்​கட்​டமைப்பு மற்​றும் மேம்​பாட்டு வரி மற்​றும் இந்த இரு வரி​கள் மீதா 10 சதவீத சமூக நல கூடு​தல் வரி என மொத்​தம் 11 சதவீத இறக்​குமதி வரியி​லிருக்கு விலக்கு அளிக்​கப்​படு​கிறது.

இந்த வரி​விலக்கு நூல், துணி​கள், ஆடைகள், அலங்​காரப் பொருட்​கள் உள்​ளிட்ட ஜவுளி உற்​பத்​திக்​கான செல​வு​களை குறைக்​கும். உற்​பத்​தி​யாளர்​கள் மற்​றும் நுகர்​வோருக்கு மிக​வும் பயனுள்​ள​தாக இருக்​கும்.உற்​பத்தி செலவு குறைவதன் மூல​மும் ஜவுளித் துறை​யில் சிறு மற்​றும் நடுத்தர நிறு​வனங்​களை பாது​காப்​ப​தன் மூல​மும் ஜவுளி ஏற்​றும​தி​யில் இந்​தி​யப் பொருட்​களின் போட்​டி​யிடும் திறன் மேம்​படும். இவ்​வாறு அந்த அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x