Last Updated : 29 Aug, 2025 12:35 AM

 

Published : 29 Aug 2025 12:35 AM
Last Updated : 29 Aug 2025 12:35 AM

அமெரிக்காவின் 50% வரி விதிப்பு | நெருக்கடியில் இருந்து மீண்டு வருவோம்: ஜவுளித் தொழில் அமைப்பினர் நம்பிக்கை

கோவை: ஏற்​றும​தி​யை​விட உள்​நாட்டு ஜவுளி வணி​கம் 3 மடங்கு அதி​கம். எனவே, மத்​திய, மாநில அரசுகள் உதவி​னால், அமெரிக்​கா​வின் வரி நெருக்​கடி​யில் இருந்து மீள்​வோம் என்று ஜவுளித் தொழில் துறை​யினர் நம்​பிக்கை தெரி​வித்​துள்​ளனர்.

இது தொடர்​பாக தென்​னிந்​திய மில்​கள் சங்​கத் (சை​மா) தலை​வர் எஸ்​.கே.சுந்​தர​ராமன் கூறும்​போது, “அமெரிக்​கா, இந்​தியா மீது விதித்​துள்ள 50 சதவீத வரி​வி​திப்பு ஏற்​புடையதல்ல. அதிர்ச்​சிகர​மானது. இதனால் ஏற்​பட்​டுள்ள நெருக்​கடியை எதிர்​கொள்​ளத் தேவை​யான நடவடிக்​கைகளை மத்​திய அரசு மேற்​கொள்ள வேண்​டும்.

தொழில் துறை​யினருக்கு நிதி​உத​வி, சலுகைகள், வேறு நாடு​களில் ஏற்​றும​திக்​கான வாய்ப்​பு​களைக் கண்​டறிந்து செயல்பட உதவி செய்​தல் போன்ற நடவடிக்​கைகள் அவசி​ய​மாகும். இந்​தி​யா​வின் மொத்த ஏற்​றும​தியை ஒப்​பிடும்​போது உள்​நாட்டு ஜவுளி வணி​கம் 3 மடங்கு அதி​க​மாகும். தற்​போது நில​வும் பிரச்​சினைக்கு விரை​வில் தீர்வு கிடைக்​கும் என நம்​பு​கிறோம்” என்​றார்.

இந்​திய ஜவுளித் தொழில்​கள் கூட்​டமைப்​பின் (சிட்​டி) முன்​னாள் தலை​வர் ராஜ்கு​மார் கூறும்​போது, “நீண்ட நாள் கோரிக்​கையை ஏற்​று, பருத்​திக்​கான இறக்​குமதி வரி விலக்கு செப். 30 வரை வழங்​கப்​பட்​டது.

இந்த அறி​விப்பு வரவேற்​கத்​தக்​கது என்​றாலும், மிக​வும் குறுகிய கால சலுகை என்​ப​தால், நடை​முறை சிக்​கல்​களை எடுத்​துக்​கூறி, சலுகையை நீட்​டித்து தர வேண்​டும் என்று கோரிக்கை விடுத்​தோம். அதை ஏற்று தற்​போது மத்​திய அரசு டிச. 31 வரை சலுகையை நீட்​டித்து உத்​தர​விட்​டுள்​ளது. இந்​நட​வடிக்கை நூற்​பாலைத்​துறைக்கு மட்​டுமின்​றி, ஆயத்த ஆடை, பின்​னலாடை உள்​ளிட்ட அனைத்து துறை​களுக்​கும் உதவும்” என்​றார்.

மறுசுழற்சி ஜவுளித் தொழில்​கள் கூட்​டமைப்​பின்​(ஆர்​டிஎப்) தலை​வர் ஜெய​பால் கூறும்​போது, “ஜவுளித் தொழில் மட்​டுமின்​றி, அனைத்து துறை​களி​லும் பொருட்​கள் உற்​பத்​திக்​குத் தேவைப்​படும் மூலப் பொருட்​களின் விலை சர்​வ​தேச விலை​யில் கிடைப்​பதை அரசு உறுதி செய்ய வேண்​டும்.

சலுகைகள் வழங்க வேண்டும்: அதே​போல, ஏதேனும் ஒரு துறை பிரச்​சினை​களை எதிர்​கொள்​ளும்​போது, அதை சார்ந்​துள்ள தொழில்​துறை​யினர் நெருக்​கடி​யில் இருந்து மீண்டு வர அரசு தேவை​யான சலுகைகளை வழங்க வேண்​டும். 2022 முதல் ஜவுளித் துறை பல்​வேறு காரணங்​களால் நெருக்​கடி​யில் செயல்​பட்டு வரு​கிறது. எனவே, தற்​போது வெளி​யிடப்​பட்ட அறி​விப்​பு​களால் தற்​காலிக தீர்வு மட்​டுமே கிடைக்​கும். நிரந்​தரத் தீர்வு கிடைக்க அரசு நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும்” என்​றார்.

இந்​திய பருத்தி கூட்​டமைப்பு (ஐசிஎஃப்) தலை​வர் துளசிதரன் கூறும்​போது, “பருத்​திக்​கான இறக்​குமதி வரி விலக்கு தொடர்​பாக மத்​திய அரசின் அறி​விப்பு மிக​வும் வரவேற்​கத்​தக்​கது. மிக​வும் நெருக்​கடி​யான சூழலில் மேற்​கொள்​ளப்​பட்டஇந்​நட​வடிக்கை தொழில்​துறை​யினருக்கு மிக​வும் உதவும்” என்​றார்.

வட்டி மானியம்... தமிழ்​நாடு ஓபன் எண்ட் மில்​கள் சங்​கத் (ஓஸ்​மா) தலை​வர் அருள்​மொழி கூறும்​போது, “அமெரிக்​கா​வின் வரி விதிப்​பால் திருப்​பூர், கரூர் ஏற்​றுமதி ஜவுளித் தொழிலுக்கு கடும் நெருக்​கடி ஏற்​பட்​டுள்​ளது. வங்​கிக் கடனை திருப்​பிச் செலுத்​து​வதற்​கான காலஅவ​காசத்தை நீட்​டித்து வழங்​குதல், மூலப்​பொருட்​கள் வாங்​கு​வதற்​கான மூலதனத்​துக்கு 5 சதவீத வட்டி மானி​யம் வழங்​குதல், செயற்கை இழை இறக்​கும​திக்கு விதிக்​கப்​பட்​டுள்ள தரக்​கட்​டுப்​பாடு​களை நீக்​குதல் போன்ற நடவடிக்​கைகளை மத்​திய அரசு மேற்​கொள்ள வேண்​டும். தமிழக அரசு மின் கட்​ட​ணத்​துக்கு ஒரு யூனிட்​டுக்கு ரூ.2 வரை மானி​யம்​ வழங்​கவேண்​டும்​’’ என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x