Published : 25 Aug 2025 06:39 AM
Last Updated : 25 Aug 2025 06:39 AM

கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.40 ஆக உயர்வு: சில்லறை கடைகளில் ரூ.60-க்கு விற்பனை

சென்னை: கோயம்​பேடு சந்​தை​யில் கடந்த மே மாதம் மொத்த விலை​யில் தக்​காளி கிலோ ரூ.15-க்​கும் குறை​வாக விற்​கப்​பட்டு வந்தது. ஜூன் மாத பிற்​பகு​தி​யில் தக்​காளி விலை உயரத் தொடங்​கியது. படிப்​படி​யாக உயர்ந்து நேற்று (ஆக.24) கிலோ ரூ.40 வரை விற்​கப்​பட்​டது. திரு​வல்​லிக்​கேணி ஜாம் பஜார், சைதாப்​பேட்டை காய்​கறி சந்தை உள்​ளிட்ட சில்​லறை விற்​பனை காய்​கறி கடைகளில் கிலோ ரூ.60 வரை விற்​கப்​படு​கிறது.

அதே​போல், கடந்த மே மாதம் கிலோ ரூ.40 வரை சரிந்​திருந்த முருங்​கைக்​காய் நேற்​றைய நில​வரப்​படி மேலும் சரிந்து கிலோ ரூ.10-க்கு விற்​கப்​பட்​டது. முட்​டை கோஸ் விலை​யும் நேற்று கிலோ ரூ.5 ஆக வீழ்ச்சி அடைந்​திருந்​தது. கோயம்​பேடு சந்​தை​யில் மற்ற காய்​கறிகளான பீன்ஸ் ரூ.50, அவரைக்​காய் ரூ.40, பச்சை மிள​காய் ரூ.30, பாகற்​காய் ரூ.25, கேரட், சாம்​பார் வெங்​கா​யம் தலா ரூ.20. வெங்​கா​யம் ரூ.17, புடலங்​காய், கத்​தரிக்​காய், உருளைக்​கிழங்கு தலா ரூ.15, பீட்​ரூட், வெண்​டைக்​காய், நூக்​கல், முள்​ளங்கி தலா ரூ.10 என விற்​கப்​பட்டு வரு​கிறது.

தக்​காளி விலை உயர்வு தொடர்​பாக கோயம்​பேடு சந்தை காய்​கறி வியா​பாரி​களிடம் கேட்​ட​போது, “தமிழகத்தை ஒட்​டிய கர்​நாட​கா, ஆந்​திரா மாநில பகு​தி​களி்ல் இருந்​து​தான் கோயம்​பேடு சந்​தைக்கு தக்​காளி வரு​கிறது. அப்​பகு​தி​களில் கடந்த 2 மாதங்​களாக விட்​டு​விட்டு மழை பெய்து வரு​கிறது. அதனால் தக்​காளி உற்​பத்தி குறைந்​து, விலை உயர்ந்​துள்​ளது. செப்​டம்​பர் 3-வது வாரத்​துக்கு மேல் விலை குறைய வாய்ப்​புள்​ளது” என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x